Saturday, 24 January 2015

ஆபாசத்தையும், த்ரில்லரையும் சேர்த்து மிரட்டும் ஜெனிபர் லோபஸ்..!


45 வயதிலும் ஹாலிவுட் ரசிகர்களை தனது அழகாலும், கவர்ச்சியாலும் கிறங்கடித்து வருப்பவர் ஜெனிபர் லோபஸ்.
பாப் பாடகியும், நடிகையுமான இவருடைய ’பூட்டி’ ஆல்பம் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவருடைய நடிப்பில் ’தி பாய் நெக்ஸ்ட் டோர்’ (The Boy Next Door)என்ற படம் வெளிவந்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஜெனிபர் லோபஸின் கவர்ச்சி எல்லோரையும் கிறங்கடித்து வருகிறது. ரோப் கோஹன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெனிபர் லோபஸ் அவரைவிட வயது குறைந்த இளைஞனுடன் ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்.
அந்த உறவு எதிர்பாராத ஆபத்துகளை வரவழைக்கிறது. அந்த ஆபத்தில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது தான் இந்தபடம். ஆபாசத்தையும், த்ரில்லரையும் சேர்த்து எரோடிக் த்ரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

No comments:

Post a Comment