ஜனவரி 26, இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தன் மனைவியுடன் நாளை இந்தியா வருகிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபர்களுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் கார் நேற்று இந்தியா வந்தடைந்தது.
இந்த கார் முற்றிலும் அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக ஒபாமா தனது அலுவலகத்துடன் எப்போதும் தொடர்பிலேயே இருப்பார். பொதுவாக இந்தியா வரும் தலைமை விருந்தினர்கள், இந்திய ஜனாதிபதிக்கு உரிய குண்டு துளைக்காத காரில்தான் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சிறப்பு விமானம் மூலம் வந்தடைந்த இந்த காரானது பலத்தபாதுகாப்புடன் ஒடுபாதைக்கு அருகில்ஒபாமா வருகைக்காக காத்திருக்கின்றது.
த பீஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த காரின் டயர், டீசல் டேங்க் போன்றவையும் துப்பாக்கியால் சுட முடியாத அளவுக்கு பாதுகாப்பு கவசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒபாமா காரில் இருந்தபடியே தனது அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க முடியும்.
இந்த கார் 18 அடி நீளமும் 8 டன்கள் எடையும் கொண்டது. எட்டு அங்குல தடிமனுடன் இந்த கார் அமைந்துள்ளது. இந்த காரின் எடை போயிங் 757 விமானத்தை விட அதிக எடை கொண்டது என்று கூறப்படுகிறது.
பஞ்சர் ஆகாத வகையில் இந்த காரின் டயர்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆக்ஸிஜன் டாங்கிகளும் தீயணைப்பு கருவிகளும் உள்ளன.
மேலும் இரவையும் துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் கேமிரா அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இரகசிய சேவையில் பயிற்சி பெற்ற நபர்தான் இந்த காரை இயக்குவார். அதிவேகமாக ஓட்டுவதுடன் 180 டிகிரி கோணத்தில் காரை திருப்பும் பயிற்சியும் இவர் பெற்றிருப்பார்.
எந்த பகுதியில் இருந்தாலும் காரில் இருந்த படியே ஒபாமாவால் தனது அலுவலத்துடன் தொடர்பில் இருக்க முடியும். சேட்டிலைட் போன் வசதியுடன் கூடிய இந்த கார் பெண்டகன் மற்றும் துணை ஜனாதிபதியுடனுன் நேரடி இணைப்பில் இருக்கும்.
%E2%80%99%2B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%2B%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.jpg)
No comments:
Post a Comment