Saturday, 24 January 2015

நீங்க உங்க மனைவிக்கு உண்மையான கணவனா...?


அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிகே படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்து மதத்தை இழிவுப்படுத்திய அமீர் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்து மகாசபை.
தற்போது அதைத்தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகிய ’கான்’களுக்கும் இந்து மகாசபை சவால் விடுத்துள்ளது.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதியும் பேசியும் வரும் இந்து மகாசபை, தனது வாராந்திர பத்திரிகையான இந்து சபா வார்த்தாவில் எழுதிய தலையங்கத்தில் ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோர் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களாக இருந்தால் இந்து மதத்தைத் தழுவ வேண்டும் என்று சவால் விடுத்துள்ளது.
ஷாருக் கானின் மனைவி கௌரி கான், அமீர் கான் மனைவி கிரண் ராவ், சயீஃப் அலி கான் மனைவி கரீனா கபூர். இவர்கள் தவிர ஃபர்தீன் கான், இம்ரன் ஹஷ்மி ஆகியோரும் இந்து மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதால் அவர்களையும் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
இது தொடர்பாக பத்திரிகையின் ஆசிரியர் முன்னா குமார் சிங் கூறுகையில், இது பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு எங்களது சவால் ஆகும். இவர்கள் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களானால் அவர்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும்.” என்றார். மேலும் அவர் “இந்துக்களுக்கும் இந்து நாட்டுக்கும் எதிராக சதி நடந்து வருகிறது.
நடிகைகள் ஷர்மிளா தாகூர், கரீனா கபூர், கௌரி, கிரண் ராவ், ரீனா தத், கவுரி சிப்பர் ஆகியோரை முன்னா குமார் சிங், ‘லவ் ஜிஹாதியால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தார்.
மதம் மாறினால் தான் மனைவியை நேசிக்கிறோம்னு அர்த்தமா..? இந்து மகாசபை சொல்வது சரிதானா..?

No comments:

Post a Comment