தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவருடைய எதார்த்தமான நடிப்பை பாராட்டாத இயக்குநர்களே கிடையாது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் பாலுவிட்டிலும் தன்னுடைய ஒரே படத்தின் மூலம் முத்திரை பதித்துவிட்டார். தற்போது பால்கி இயக்கிவரும் ’ஷமிதாப்’ படத்தில் நடித்துவருகிறார்.
இதில் தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார். இது பாலிவுட் படம் என்றாலும் இதில் இருக்கும் அதிகமான முகங்கள் தமிழ் முகம்தான்.
இதனால் தமிழ் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இருதினங்களுக்கு முன்னர் ஷமிதாப் படத்தின் இசை வௌியீடு மற்றும் இசைஞானி இளையராஜாவுக்கு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கான பாராட்டு விழாவும் சிறப்பாக நடந்தது.
இந்நிலையில் ஷமிதாப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் நடிகர் தனுஷ், நடிகை அக்ஷராஹாசன் மற்றும் இயக்குநர் பால்கி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ராஞ்சனா படத்திற்கு பிறகு இந்தியில் ஒரு நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போது தான் பால்கி சாரின் ஷமிதாப் பட வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸடார் அமிதாப் பச்சன் உடன் நடித்துள்ளேன்.
அமிதாப்பை இதற்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவருடன் நடித்தபோது எனக்கு பயம் இல்லை, ஆனால் கொஞ்சம் தயக்கம் தான் இருந்தது. என்னை பொறுத்தவரை ஷமிதாப் படம் என்றால் அது முழுக்க முழுக்க இளையராஜா சார் தான். அவ்வளவு பிரமாதமான இசையை கொடுத்திருக்கிறார். அக்ஷராவை பொறுத்தமட்டில் அவரது இரத்தத்திலேயே நடிப்பு ஊறிபோய் உள்ளது, அதனால் இந்தப்படத்தில் அசால்ட்டாக நடித்தார் என்றார்.
அதன் பிறகு இயக்குநர் பால்கி பேசுகையில், ஷமிதாப் படத்தில் அமிதாப், தனுஷ் ஆகிய இருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். தனுஷ் ஒரு திறமையான நடிகர். என்னை பொறுத்தவரை இந்திய சினிமாவின் பவர்புல் நடிகர் தனுஷ் தான்.
அதேப்போல் இசை என்றால் ராஜா சார் தான். எனக்கு அவரை தவிர வேறு யாரையும் தெரியாது. ஷமிதாப் படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்றவர், என்படத்தில் நடிக்க யாராவது தயாராக இருந்தால் நிச்சயம் தமிழிலும் படம் எடுப்பேன் என்று கூறினார்.

No comments:
Post a Comment