2001ஆம் ஆண்டு ”தமிழன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் ”டி.இமான்”.
பிரபுசாலமன் இயக்கிய ”மைனா” மற்றும் ”கும்கி” ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து முன்னனி இசையமைப்பாளராக உருவெடுத்தார். கும்கி படத்தில் ”சொய்ங்…சொய்ங்” என்ற பாடலுக்கு இசையமைத்து கிராமபுறங்களில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் முனுமுனுக்க வைத்தார்.
இப்போது தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து தவிர்க்க முடியாத ஒரு இசை அமைப்பாளராகி இருக்கிறார் இமான்.
மேலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் ராசியான இசையமைப்பாளராக வளம் வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள இமானின் பிறந்தநாள் இன்று. இந்த வருடத்தில் அவர் 7 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment