கடந்த ஆண்டு இயக்குநர் விஜயும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
திருமணத்திற்குப் பிறகு நடிகை அமலா ஸ்கூல்பெண்ணாக ‘மிலி’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தப் படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு படங்கள் ஏதும் இல்லையென்றாலும், விளம்பரப் பொருள்களின் லாஞ்ச், கடைத் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் பிரபல வாஷிங் பவுடர் பொருள் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமலாபால், ‘‘துணி துவைப்பது பெண்களின் வேலை மட்டும்தானா?’’ என்று ப்ரஸ் மீட்டில் ஆவேசப்பட்டார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில், ‘‘எனக்குத் தெரிந்த ஒரு சர்வேயின்படி சென்னையில் மட்டும் 96% சதவிகிதம் பெண்கள், யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவே வீட்டு வேலைகளைச் செய்து கஷ்டப்படுகிறார்களாம். கணவர்கள் துளிக்கூட உதவுவது இல்லை. இந்தியா முழுவதும் 76% சதவிகிதம் பெண்கள் தனியாகக் கஷ்டப்படுகிறார்கள் என்றும் சொல்கிறது அந்த சர்வே.
வீட்டு வேலைகள் செய்வதற்கு மட்டுமே பெண்கள் படைக்கப்படவில்லை. கணவர்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லையென்றாலும், ‘சூப்பர்’, ‘சமையல் லவ்லி’, ‘நல்லா துவைச்சிருக்கியே’ என்று அட்லீஸ்ட் சின்னச் சின்னப் பாராட்டுக்களையாவது கொடுங்கள். கணவர்களிடமிருந்து பெண்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த வகையில் நான் பாக்கியசாலி. என் கணவர் விஜய், என் துணிகளைத் துவைப்பதிலிருந்து சமைப்பது வரைவீட்டு வேலைகளில் நான் எதிர்பார்த்தததை விட எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். விஜய் என் கணவராகக் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஐ லவ் யூ விஜய்.’’ என்று காதல் பொங்க கூறினார்.

No comments:
Post a Comment