ஜனவரி 27
1987
பி.டி. உஷா ஆசியாவின் சிறந்த தடகள வீரராக பரிந்துரைக்கப்பட்டார்…!!
பி.டி. உஷா, உலக அளவில் அறியப்படும், ஒரு இந்திய பெண் தடகள வீரர் ஆவார். கேரளாவைச் சேர்ந்த இவர் 1979 முதல் தடகளத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ”இந்தியத் தட களங்களின் அரசி” என்றும் இவர் போற்றப்படுகிறார்.
1985லும், 1986லும் சிறந்த உலகத் தடகள வீரர்(World Trophy for best Athlete) விருதினைப் பெற்று உலக அறங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இத்தகைய பெருமைகள் உடைய உஷா ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தினம் இன்று. 1987ம் ஆண்டு இதே நாளன்று இவ்விருதிற்காக உஷா பரிந்துரை செய்யப்பட்டார்.
காரணம் 1986ம் ஆண்டு, தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த 10வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், 4 தங்கம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார் உஷா. இந்த வெற்றி இவருக்கு, உலகின் ”சிறந்த தடகள வீரர்” விருதைப் பெற்றுத் தந்தது. அதோடு, இந்த வெற்றிக்காக, இவருக்கு ”ஆசியாவின் சிபிரிட் குவீன்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
எனவே பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1986ல் ஆசியாவின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு தேர்வானார் பி டி உஷா. இதன் மூலம் ஆசியாவின் சிறந்த தடகள வீரர் விருதை மூன்றாவது முறையாக பெறும் பெருமையையும் இவர் பெற்றார். மேலும், உஷா, 1984, 1985, 1986, 1987, 1989 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் ஐந்து முறை இவ்விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1880 - தாமஸ் ஆல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.
1926 - முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை(TV Telecasting) ஜோன் லோகி பயார்ட் என்பவர் நடத்திக் காட்டினார்.
1927 - பிரபல பிரிட்டிஷ் திரைப்பட நடிகர் மைக்கேல் கிரேக், மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்தார்.
1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1962 - இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
1988 - உலகில் முதன் முறையாக ஹெலிகாப்டர் மூலம் தபால் கொண்டு சேர்க்கும் முறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடங்கப்பட்டது.
1989 - மு.க. கருணாநிதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.
.jpg)
No comments:
Post a Comment