அமெரிக்கா மற்றும் இந்தியாவில், இன்று பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் திடீரென முடங்கியதால் சமூகதளவாசிகள் பெரும் பதற்றத்திற்குள்ளாகி உள்ளனர்.
இன்று காலை முதல் இந்தியாவில் பேஸ்புக் கனெக்ட் ஆக வில்லை. பேஸ்புக் எரர் என்று தொடர்ந்து வந்ததும்,பேஸ்புக் வாசிகள் கடுப்பாகி விட்டனர்.
அதே சமயம், டுவிட்டர் வாசிகள் இது குறித்து டுவீட் செய்து வருகின்றனர். பேஸ்புக் வாசிகள் சிலரும் டுவிட்டரில் இச்செய்தியை பிரசங்கப்படுத்தினர்.
இதே போல் அமெரிக்காவிலும், அதிகாலை(அமெரிக்க நேரப்படி) பேஸ்புக் முடங்கியுள்ளது. தங்கள் சேவையை மேம்படுத்துவதே இந்த முடக்கித்திற்கு காரணம் என்று பேஸ்புக் அதன் பேஜில் கூறியுள்ளது.
பேஸ்புக் போலவே, பேஸ்புக்கின் மற்றொரு சமூகதள இணையமும், ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனும் ஆன, இன்ஸ்டாகிரமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முடங்கியுள்ளது.
இதன் மொபைல் அப்ளிகேஷன்கள் வேலை செய்யாததால், ஸ்மார்ட் போன் வாசிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இன்ஸ்டாகிரம் தன் டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க நேரப்படி காலை, 6:51 மணிக்கு, தங்கள் சேவையை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு டுவீட் செய்துள்ளது.
இந்த திடீர் முடக்கத்திற்கு என்ன காரணம் அல்லது யார் காரணம் என்று இன்னும் தெரியவரவில்லை.
ஆனால், இந்த முடக்கத்தால், காலையில் எழுந்ததும் பேஸ்புக் முகத்தில் முழித்து, நண்பர்களுக்கு வாழ்த்துச் சொன்னால் தான் விடியும் என்ற பட்சத்தில் சில பேஸ்புக் புழுக்களுக்கு விடியலே ஒரு மணி நேரம் தள்ளிப் போய் உள்ளது.
இதையும் பார்க்க:

No comments:
Post a Comment