சென்னையில் பட்டப் பகலில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகைகளைக் கொள்ளையடித்த நபரை, தூத்துக் குடியில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி, கத்தி முனையில் ஒரு பெண்ணிடம் மிரட்டி ஒரு நபர், நகை பறிப்பது போன்ற ஒரு வீடியோ வாட்ஸாப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, இந்த வீடியோவை வைத்துக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் சேகரித்தனர் காவலர்கள்.
இந்த வீடியோ மூலம் பெண்மணி, துரைப்பாக்கத்தைச் சேந்த வேலம் என்ற பள்ளி ஆசிரியை என்பதும், அவர் கடந்த 19ம் தேதி, பணியை முடித்து வீடு திரும்பும் வேளையில், இரண்டு வாலிபர்கள் ஸ்கூட்டியை வழிமறைத்து, கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, அவரது கழுத்தில் இருந்த 14 பவுன் நகைகளையும், விலையுயர்ந்த செல்போனையும் பறித்துச் சென்றனர் என்பதும் கண்டு பிடிகப்பட்டது.
மேலும், இச்சம்பவத்தை ஒரு பெண்மணி படம் பிடித்து தன் தோழிக்கு அனுப்பியுள்ளார் என்றும் இப்படித்தான் வாட்ஸாப்பில் இந்த வீடியோ வலம் வந்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கொள்ளையனை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்று சென்னை மாநகரபோலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன் படி தென் சென்னை இணை கமிஷ்னர் அருண் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெறும் வீடியோவை வைத்து அந்தக் கொள்ளையனைத் தேடி வந்தனர்.
முதற்கட்டத்தில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் இடம்பெற்ற இருவரும், 32 வயதான நீராவிமுருகன் மற்றும் அவனது 28 வயதான கூட்டாளி ஹரிகிருஷ்ணன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இவர்கள் இருவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. உடனே தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸ் குழு, ஹரிகிருஷ்ணனை டிசம்பர் 26ம் தேதி, பிடித்தது.
மேலும், அவனிடம் கிடைத்த தகவலின் படி, நீராவி முருகன் தூத்துக்குடியில் உள்ளார் என்று தெரியவந்தது. இதனை அடுத்து, தூத்துக் குடி சென்ற தனிப்படையினர் நேற்று நீராவி முருகனைச் சுற்றி வளைத்து பிடித்தனர். இன்று காவலர்கள் நீராவி முருகனை சென்னை அழைத்து வருகின்றனர்.
கைதான மீது தூத்துக்குடியில் கொலை வழக்கு, கோவிலம்பட்டி, கோவை உள்பட பல பகுதிகளில் கொலை,கொள்ளை வழக்குகள் இருக்கிறதாம்.

No comments:
Post a Comment