Tuesday, 27 January 2015

ரோட்டுக்கடையில் பீர்.. 20 லட்சம் பேர் சாவு... நயன்தாராவிற்கு எதிராக போராட்டம்..!


சமீபத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் நடிகை நயன்தாரா பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நிஜமாகவே நயன்தாராதான் பீர் வாங்கினாரா..? இது உண்மையா..? அல்லது ஏதும் படப்பிடிப்பா? என்று தெரியாமல் விவாதிக்க தொடங்கிய நிலையில், அவர் நடித்து வரும் ஒரு படத்தில் தான் இந்த காட்சி இடம்பெறுவதாக பின்னர் தெரியவந்தது. இந்தக்காட்சியை படமாக்கியபோது அதை யாரோ செல்போனில் திருட்டு தனமாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி தான் என்றாலும், நயன்தாராவிற்கு எதிராக கருப்பு கொடி தூக்க தயாராகி வருகின்றனர் இந்து மக்கள் கட்சியினர்.
இதுகுறித்து அந்த கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. நடந்தும் வருகின்றன. தமிழகத்தில் மதுகுடித்து இறந்து போன ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
இந்தசூழலில் நடிகை நயன்தாரா, டாஸ்மாக்கிற்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
மேலும் பெண்களை குடிக்க தூண்டுவது போலவும் இந்த காட்சி உள்ளது, எனவே இந்தக்காட்சியை சம்பந்தப்பட்ட படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் நயன்தாராவுக்கு எதிராகவும், அந்தப்படத்திற்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
நயன்தாரா வாங்கிய பீர்....படத்திற்கே முக்காடு போட வச்சுடுமோ..?

No comments:

Post a Comment