அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர், இன்று அவர் சவுதி கிளம்புகிறாராம். ஆனால், கடந்த 25ஆம் தேதி தனது மனைவியிடன் இந்தியா வந்த ஒபாமாவுக்கு இந்தியாவோட பாரம்பரிய உணவுகள் ரொம்பவே பிடிச்சு போச்சாம்.
ஒபாமா மற்றும் அவரது மனைவிக்கும் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் விருந்து அளிக்கப்பட்டதாம். விருந்தில் சைவம் மற்றும் அசைவ வகைகள் வைத்து அசத்தியுள்ளனர். குறிப்பாக வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் அதிகமாக இடம் பிடித்திருந்ததாம்.
அசைவ வகையில் செட்டிநாடு ஸ்பெஷல் உணவுகளும். சைவ வகையில் ஏராளமான விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. காஷ்மீரின் ஸ்பெஷல் கபாப் மற்றும் கடுகு எண்ணெய்யில் பொரித்த மீன் டிக்கா ஆகிய உணவுகளை விரும்பி சாப்பிட்டாராம் ஒபாமா.
மேலும் தமிழகத்தின் ஃபில்டர் காஃபி அவரை மிகவும் கவர்ந்ததாக டெல்லி செய்தி வட்டாரம் குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டுக்கு ஒரு ரவுண்ட் வருவாரோ!!?

No comments:
Post a Comment