சில மாதங்களுகு முன் ருத்ராட்ச மாலையை தாலியாக அணிந்ததற்கு நடிகை குஷ்பு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், சர்ச்சையான இந்தத் தாலி மேட்டர் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் குஷ்பு.
ஃபேஷனுக்காக ருத்திராட்ச மாலையில் தாலி
சில ஆண்டுகளுக்கு முன் குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்ககிய நகரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழா தான் இந்த தாலி மேட்டருக்கு பிள்ளையார் சுழி போட்டது.
இந்த விழாவில் குஷ்பு பேஷனுக்காக தாலி என்ற பெயரில், பிளாஸ்டிக்கால் ஆண தங்கம் போன்ற ஜொலிக்கும் பெரிய தாலியை ருத்திராட்ச மாலையில் கோர்த்து அணிந்து வந்தார்.
அப்போ குஷ்பு, தி.மு.க.,வில் இருந்த காலம். அதனால் இந்த விழாவுக்கு, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இவர்களுடன் அப்போதய முதல்வர் கருணாநிதி துணைமுதல்வர் ஸ்டாலின், கனிமொழி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வெளியில் அவ்வளவாக இது தெரியாததால், அப்போது இந்த விவகாரம் அவ்வளவாக சூடு பிடிக்க வில்லை.
ருத்ராட்சத்தை அவமதித்ததாக வழக்கு
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட குஷ்புவின் புகைப்படங்கள் வார இதழ் ஒன்றில் வெளியானது. இந்த வார இதழைப் படித்த மக்கள் பலர், குஷ்புவை விமர்சித்து வந்தனர்.
இந்த விமர்சனங்கள் ஒரு படி மேலே சென்று இந்து மக்கள் கட்சி கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நிலைக்கு சென்று விட்டது. அந்த புகார் மனுவில்,
”வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்பு தாலியில் ருத்ராட்ச கொட்டை கோர்த்து அணிந்திருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது. இது இந்து மதத்திற்கு எதிரானது. மேலும் இந்து மதத்தை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை அடுத்து, இவ்வழக்கு விரைவிலேயே விசாரணைக்கு வரும் என்று தகவலகள் வெளியாயின.
குஷ்பு விளக்கம்
இதுவரை அமைதியாக இருந்த குஷ்பு, இப்போது தான் விழித்துக் கொண்டு, இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விளக்கத்தில், நிகழ்ச்சியில் தான் அணிந்து வந்தது ருத்ராட்சம் கிடையாது என்றும், பாரம்பரியமான நகையின் ஒரு பகுதி தான் அது என்றும், அதை யாருக்கும் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் குஷ்பு.
குஷ்பு அளித்துள்ள விளக்க அறிக்கை பின்வருமாறு:
நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது. நகரம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அந்த நகையை கழுத்தில் அணிந்து இருந்தேன்.
அது பார்க்க அழகாக இருந்தது. அதை ருத்ராட்ச மாலை என நினைத்து பலரும் என்னிடம் கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். ஆனால் இப்போது பத்திரிகைகளில் அந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான் உண்மையான ருத்ராட்ச மாலையை தாலியாக செய்து அணிந்துள்ளதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள்.
இதை உண்மை என்று நம்பி ஒருவர் எனக்கு எதிராக வழக்கும் போட்டு விட்டார். ருத்ராட்சம் தெய்வீகமானது என்றும், முனிவர்கள், யோகிகள் அணியக்கூடியது என்றும் படித்து இருக்கிறேன். ருத்ராட்ச மாலை அணிவதால் நல்ல பலன்கள் உண்டாகும் என்றும் கேள்விப்பட்டு உள்ளேன்.
ஆனால் ருத்ராட்ச மாலைக்கும் நான் கழுத்தில் அணிந்த மாலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல
குஷ்பு இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் தரம் இல்லை. முதலில், கற்பு பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கினார். அதை அடுத்து, இந்துக் கடவுள்களின் படங்கள் போட்ட புடவை கட்டி வந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த புடவை விவகாரத்தில், பிரம்மச்சாரியான அனுமான் மற்றும் ஒருவனுக்கு ஒருத்து என்பதைப் பிரதிபலிக்கும் ராமன் இருவரது படங்களும் புடவையில் இருந்ததை குத்திக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதை அடுத்து, ரொம்ப முன்னாடி செய்ததற்காக இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

No comments:
Post a Comment