Tuesday, 27 January 2015

இவன்லா ஒரு ஹீரோவானு.. விஜய்யை வச்சு படம் எடுக்க யாரும் தயாராயில்ல..


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய்யை வைத்து படம் இயக்க யாரும் முன்வரவில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
விஜய்யின் வளர்ச்சியில் ஆணி வேராக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், சினிமாவில் நான் எதுவும் சாதிக்கவில்லை. முதல்படம் பண்ணும்போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் தான் இப்போதும் படம் இயக்கியுள்ளேன். இவ்வளவு படங்கள், இவ்வளவு மொழியில் படம் பண்ணிவிட்டேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. தமிழில், என் இயக்கத்தில் இது கடைசி படம் என்ற நிலையில் நான் உள்ளேன்.
90களிலேயே, நான் படம் இயக்கியது போதும், பணம் சம்பாதித்தது போதும் என பாதி சாமியார் ஆனேன். ஆனால் என் மகன் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அவரை வைத்து படம் பண்ண சொல்லி, அவரை அழைத்து கொண்டு நான் போகாத கம்பெனியே இல்லை.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் தயாரிக்கிறேன், நீங்கள் படம் பண்ணுங்கள் என்றேன், ஆனால் உங்கள் மகன் ஹீரோவா என்று யாரும் முன்வரவில்லை. அதனால் தான் என் மகனின் ஆசைக்காக இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஆனேன். ஆனால் இப்போது அவருடைய வளர்ச்சியையும், நடிப்பையும் பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment