நடிகை பானுவை எல்லோருக்கு ஞாபகம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படத்தில் நடித்தார் என்று சொன்னால் ஞாபகம் வரும். அவரேதான்.
நயன்தாரா சாயலில் மலையாளததில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர்தான் இந்த பானு. நயன்தாராவை ஐயா படத்துக்காக தமிழுக்கு கொண்டு வந்த அதே இயக்குநர் ஹரி தான் தாமிரபரணி படத்துக்காக பானுவை தமிழுக்கு கொண்டு வந்தார். இந்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் சில முன்னணி நடிகர்களின் படம் பானுவுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.
ஆனால் அந்த நேரம் பானுவின் குடும்பத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளால் அவர் சில மாதங்களாக கேரளாவுக்கு சென்றுவிட்டார். அதனால் தேடிவந்த படங்களில்கூட அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், ஆர்கே நடித்த அழகர்மலை, பொன்னர்சங்கர், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது வாய்மை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, சந்தானத்துக்கு ஜோடியாக பானு நடிக்கிறார்.
தான் ஹீரோ ஆவதற்கு முன்பு வெறும் காமெடியனாக மட்டுமே நடித்து வந்த சந்தானம் இந்த படத்தில்ஆர்யாவுக்கு இணையான இன்னொரு ஹீரோவாகவே நடிப்பதால், சந்தானத்துக்கு ஜோடியாக பானுவை நடிக்க வைக்கிறார்களாம்.
கலக்குங்க சந்தானம்...

No comments:
Post a Comment