Monday, 26 January 2015

சரக்குக்கு நோ சொல்லி திருச்சியில் கூட்டத்தோடு ஓடிய வைகோ…!!


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில், மது விலக்கை அமல்படுத்தக் கோரி ம.தி.மு.க., மாரத்தான் ஓட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, பல விதமாக மது விலக்கை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்று முயற்ச்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று திருச்சியில், மது விலக்கு மாரத்தான் என்ற ஓட்டம் ஒன்றை கட்சி சார்பில் நடத்தியுள்ளார்.
நேற்று காலை 7 மணியளவில் நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 42000 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்ப்படுகிறது. திருச்சி, கே.டி.தியேட்டர் சாலை அருகில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், ஜமால் முகமது கல்லூரி அருகில் முடிவடைந்தது.
5 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மாரத்தானை வைகோவே கொடியசைத்து வைத்து ஆரம்பித்து வைத்ததுடன், தானும் பங்கு பெற்றுள்ளார்.
இந்த மாரத்தானில் ஆண்களுக்கான 6-9 ஆம் வகுப்பு மாணவர் பிரிவில் பி. தியாகராஜன் என்பவரும், 10-12 ஆம் வகுப்பு மாணவர் பிரிவில் என்.சதீஷ்குமார் என்பவரும், கல்லூரி மாணவர்கள் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற பொதுப் பிரிவில் எம்.மணிகண்டன் என்பவரும் முதல் பரிசை வென்றனர்.
பெண்களுக்கான 6-9 ஆம் வகுப்பு மாணவிகள் பிரிவில் இரா.திவ்யா என்பவரும், 10-12 மாணவிகளுக்கான பிரிவில் பரிசு கு.தேவிபாலா என்பவரும், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பொதுப் பிவிரில் மு.சதானா பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

No comments:

Post a Comment