Monday, 26 January 2015

குடியரசு தினவிழா அணி வகுப்பில் தமிழகத்துக்கு இடமில்லை??


66வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லியில் இன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.
ஆண்டுதோரும் விழாவில் நடைபெறும் வாகன ஊர்தி அணிவகுப்பில், இந்தவருடம் தமிழக்த்தின் ஊர்தி இடம்பெறவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழகத்தின் ஊர்தி இடம்பெறாதாது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தினை அளிப்பதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
கடந்த வருட குடியரசு தினவிழாவில் தமிழக ஊர்தி இரண்டாம் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் 16 மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் மட்டுமே பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment