Sunday, 25 January 2015

நாம் ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்.?


நாம் ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்....? இந்தக் கேள்விக்கு நம்மில் பலருக்கு விடை தெரியாது. சிலருக்கு சுந்தந்திர தின விழாவுக்கும், குடியரசு தினத்துக்குமே வித்தியாசம் தெரியாது என்பது தான் இன்னும் கொடுமை. இவர்களுக்காக இந்தியக் குடியரசு தினம் குறித்த ஒரு தொகுப்பு…
1947ம் ஆண்டு பிரித்தாணியர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நிலையில், பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து மீண்டும் பழைய மன்னர்களின் ஆட்சிக்கே இந்தியா திரும்ப வேண்டி இருந்தது.
காலனி ஆட்சியில், அடிமைத்தனம் தலைதூக்கியதால் தான், இந்தியத் தலைவர்கள், பிரிட்டிஷிடமிருந்து விடுதலை கேட்டனர். ஆனால், அதிலிருந்து விடுபட்டு, மீண்டும், மன்னராட்சி என்ற அடிமைத்தனத்திற்குள் இந்திய மக்கள் சிக்கிக் கொள்வதை காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் விரும்பவில்லை.
இதனை தடுக்க தலைவர்கள் பலர் சிந்தித்து, இந்தியாவை ஜனநாயக நாடாக உருவாக்க முடிவு செய்தனர். அவ்வாறு உருவாக்குவதற்க்கு ஒரு அரசியல் அமைப்பு சட்டம் தேவைப்பட்டது. எனவே, சுதந்திரம் கிடைத்த உடனுக்குடன் 1947ம் ஆண்டு, ஆகஸ்டு 28ம் நாள் அம்பேத்கரின் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை நியமித்து, சுதந்திர இந்தியாவிற்கான தனி அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கச் சொன்னார்கள் இந்தியத் தலைவர்கள்.
அம்பேத்கரின் குழு, மக்களின் இடத்திற்கே சென்று, மக்களுக்குத் தேவையான சட்டங்களை, ஒழுங்குகளைக் கேட்டறிந்து, புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் ஆனதாம.
இந்த புதிய அரசியல் அமைப்புச் சட்டம், 1950ம் ஆண்டு, ஜனவரி 26ம் நாள் நடைமுறைக்கு வந்தது. அன்றுதான் இந்தியா ”மக்களுக்காக மக்களால் நடப்படும் அரசாங்கம்” என்ற ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தை எட்டியது. ஆனால், இந்த அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்க பட்டதற்கான முழுமையான குறிக்கோளை நாம் எட்டி விட்டோமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் முதன்மை நோக்கம், அரச குடும்பம் என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மக்களை ஆட்சி செய்யும் முறை ஒழிக்கப்பட வேண்டும். திறைமை கொண்ட பாமர மக்களும் ஆட்சிப் பொறுப்பேற்று இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்பது தான்.
ஆனால், இந்த முதன்மை நோக்கம், இன்று வரை நடந்தேறியதாக தெரியவில்லை. மன்னர் ஆட்சி என்றப் பெயர் ஒழிக்கப்பட்டதே தவிற, மக்களாட்சி என்ற பெயரில் வாரிசுகளின் வழியில் குடும்ப ஆட்சி தொடர்ந்து கொனே தான் இருக்கிறது. இந்த வாரிசு ஆட்சி முறையும், குடும்ப ஆட்சி முறையும் என்றைக்கு ஒழிக்கப்படுகிறதோ அன்று தான், இந்தியாவிற்கு உண்மையான குடியரசு நாள்.

No comments:

Post a Comment