Saturday, 24 January 2015

அடேங்கப்பா முடியலடா சாமி..? இதை பார்த்த விஜய் என்ன செய்வாரோ..?


இயக்குநரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் ‘டூரிங் டாக்கீஸ்’. இது அவருடைய 69 ஆவது படமாகும். இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருடன் அபிசரவணன், அஷ்வின், கல்கத்தா நடிகை பாப்ரி கோஷ், மனோபாலா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ரோபோ சங்கர், சாய் கோபி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் 75 வயது வாலிபனாக முதன் முறையாக ஒரு முழு கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார்.
அதில் சிம்லாவை சேர்ந்த ஹேமமாலினி என்ற அழகு தேவதை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் இருவருக்கும் ரொமன்ஸ் காட்சிகள் வேற இருக்கிறதாம்.
அதுமட்டுமல்லாமல் படத்தின் போஸ்டர்களில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஹீரோயின் முத்தம் கொடுப்பது போல் உள்ளது. தன்னுடைய மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய நடிகையிடம் அவர் செய்யும் ரொமான்ஸை எங்கு போய் சொல்ல... பாவம் இதை பார்த்தால் விஜய் என்ன செய்வாரோ..?
இது குறித்து அவரிடம் கேட்டப்போது:– படத்திற்கு தேவை என்பதால் நான் நடித்தேன். இரண்டு கதைகளை உள்ளடக்கிய படமாக ‘டூரிங் டாக்கீஸ்’ தயாராகியுள்ளது. இடைவேளை வரை ஒரு கதையும், இடைவேளைக்கு பின் இன்னொரு கதையும் இருக்கும். முதல் கதை வயதான ஒருவரின் காதலை பற்றியது.
காதல் எல்லா பருவத்தினருக்கு வரக்கூடியது. மனது இளமையாக இருக்கும் வரை காதலிக்க தடை இல்லை. வயதான காதலன் கேரக்டரில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனது உதவி இயக்குநர்கள் தெரிவித்தனர். எனவே அந்த கேரக்டரில் நான் வாழ்ந்து இருக்கிறேன். இன்னொரு கதை அக்காள்–தங்கை பாசத்தை பற்றியதாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment