முடி உதிர்தல், இக்கால தலைமுறையினருக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று. முன்பெல்லாம், இது பரம்பரையாக இருந்து வந்த ஒன்றாக மட்டுமே இருந்தது. அதாவது, தாத்தா, அப்பா, மகன், பேரன் என இப்படித்தான் தொடர்ந்தது.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக பெரும்பாலும் வழுக்கைத் தலையாகத்தான் சுற்றுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை தங்கள் அழகுப்பராமரிப்பிற்காகவே ஒரு குறிப்பிட்ட நேரத்தினை ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், ஆண்கள்? கண்டுகொள்வதே இல்லை. பின்னர், ஐயகோ!! இமயம் சரிந்ததே என்ற லெவலுக்கு ஃபீல் செய்வார்கள்.
‘சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்வது’ என்பார்களே… அது போலத்தான், ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துவது. பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதைத் தவிர வேறெந்த பலனையும் நாம் பெறுவதில்லை என்பதே உண்மை.
அட இதுக்கு என்னதாங்க தீர்வு?? என்கின்றீர்களா!??
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் அதைதான் பார்க்கப் போகின்றோம்…
முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த, 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், அதே அளவு தேங்காய் பால் சேர்த்து தலையில் தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் முடி உதிர்வது கட்டுப்படும்.
வேப்பிலையை நன்கு வேகவைத்த தண்ணீரை பயன்படுத்தி மறுநாள் குளிக்கும் போது தலையை அலசி வர முடி உதிர்தல் நிற்கும்.
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு சேர்த்து தலையில் நன்கு மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வதும் நிற்கும், நன்கு செழித்து வளரும்.
முடி உதிர்ந்த இடத்தில், பிஞ்சு ஊமத்தங்காயை அரைத்து தேய்த்து வந்தால் முடி முளைக்கும்.
வழுக்கை விழுந்த இடத்தில், சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி பூவை அரைத்து சாறு எடுத்து இரவு படுக்கும் முன்பு தேய்த்து வர முடிவளர வாய்ப்புகள் அதிகம்.
எலுமிச்சை விதை மற்றும் மிளகை அரைத்து முடி விழுந்த இடத்தில் தடவிவர முடி முளைக்கும்.
சொட்டை தலையில் பூசனிக் கொடியின் கொழுந்து இலைகளை சாறு எடுத்து தலையில் தடவி வர முடி முளைக்கும்.
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தலையில் பயன்படுத்திவர முடி வளரும்.

No comments:
Post a Comment