பிரபஞ்ச அழகி பட்டத்திற்கான இறுதிப் போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் நடக்கிறது.
முன்னதாக கடந்த புதன் கிழமை நடைபெற்ற போட்டியில் அந்தந்த நாட்டு பாரம்பரிய முறைப்படி உடையணிந்து வந்தனர். இந்த போட்டியில் 88 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கின்றனர். அலங்கார வண்டிகளில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அழகிகள் ஊர்வலமாக சென்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து நாளை மறுநாள் நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தாயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

No comments:
Post a Comment