Monday, 26 January 2015

டாஸ்மாக்கில் நயன்தாரா பீர் வாங்கியது இதுக்கு தானாம்..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை ஒன்றில் நயன்தாரா பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உண்மையா அல்லது ஏதும் படத்தின் படப்பிடிப்பா? என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். ஒரு சிலர் இது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று அடித்து சொன்னார்கள். அவர்கள் சொன்னதை போலவே அந்த காட்சி படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டதுதான்.
விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ’நானும் ரெளடிதான்’ படத்திற்காக தான் அந்த காட்சியை எடுத்துள்ளனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. பாண்டிச்சேரி என்றாலே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒயின்ஷாப்பும் அதிகம். சரக்கு விலையும் குறைவு.
எனவே அங்கு பீர் வாங்கும் காட்சியை படமாக்க முடிவு செய்தனர் படக்குழுவினர். குடிமகன்கள் அதிகம் மொய்க்கும் ஒரு சாலையோர ஒயின்ஷாப் முன்பு அந்த காட்சியை எடுத்தனர். அங்கு வந்த சிலருக்கு இது சினிமா சூட்டிங்தான் என்பதை உணரவே நீண்டநேரம் பிடித்ததாம்.
கடந்த சில வருடங்களாகவே படம் வெளியாவதற்கு முன்பே படத்தைப் பற்றிய காட்சிகள் வெளியாவதும், அது தொடர்பான சர்ச்சைகள் உருவாவதும் வாடிக்கையாகிவருகிறது.

No comments:

Post a Comment