Monday, 26 January 2015

மூன்றே வார இடைவெளியில் ரிலீஸாகும் 3 தனுஷ் படங்கள்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாரக இருப்பவர் தனுஷ். தமிழைத் தவிர பாலிவுட்டிலும் கொடிக்கட்டிப் பரக்கிறார்.
விரைவில் இவருடைய மூன்று படங்கள் வெளிவரவிருக்கிறது. இந்த மூன்று படங்களும் மூன்றா வார இடைவெளியில் ரிலீஸாகின்றன. தனுஷின் சினிமா கேரியரில் இதுபோன்ற ஒரு அபூர்வ சூழ்நிலை இதற்கு முன்பு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்..
ஆமாம் என்னென்ன மூன்று படங்கள்... அனேகன், ஷமிதாப் இந்த இரண்டு படங்கள் தானே ரிலீஸாகின்றன என்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். மூன்றாவது படம் எதுவென்றால் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்து 6 தேசிய விருதுகளை வென்ற ‘ஆடுகளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படம்தான் மூன்றாவது படம்.
‘பண்டெம்கொல்லு’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 6ஆம் தேதி அமிதாப் பச்சனுடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஷமிதாப்’ படம் உலகமெங்கும் வெளியாகிறது. அதனையடுத்து பிப்ரவரி 13ஆம் தேதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அனேகன்’படம் திரைக்கு வருகிறது.
3 வாரங்கள், 3 மொழிகளில் தான் நடித்த 3 படங்கள் வரவிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறாராம் தனுஷ்.


No comments:

Post a Comment