ஆந்தி்ர மாநிலம் ஐதராபாத்தில், நடந்த கேன்சர் நோய் குறித்த மாநாட்டை நடிகர் கமல் ஹாசன் தொடங்கி வைத்தார். வழக்கம் போல நடிகை கெளதமியும் கமலுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், புற்றுநோய் வந்தால் எல்லோரும் மனதை தளரவிட்டு விடுகிறார்கள், அத்தோடு நம் வாழ்க்கை முடிந்துவிட்டது, விரைவில் இறந்து விடுவோம் என்று பலர் நினைக்கிறார்கள். இது வெறும் பயம்தான்.
புற்றுநோயை உடனடியாக கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கெளதமிதான். புற்றுநோய்க்கு அவர் பணிந்து விடவில்லை. அதை எதிர்த்து தைரியமாக போராடினார். இறுதியில் அதனை விரட்டினார்.
சினிமாவில்தான் நான் ஹீரோ. ஆனால் நிஜவாழ்க்கையில் கெளதமி தான் ஹீரோ. அவருக்கு முன்னால் நான் துணை நடிகர்தான். நம்பிக்கையுடன் செயல்பட்டால் புற்றுநோயை எளிதில் விரட்டி விடலாம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
பின்னர் கெளதமி பேசுகையில், "எனக்கு கேன்சர் வந்ததை மருத்துவர்கள் யாரும் பரிசோதனை செய்து சொல்லவில்லை. நான் படித்த அறிவினால் அதனை தெரிந்து கொண்டேன். இதற்காக சிகிச்சைக்கு சென்றேன். முதலில் ஹீமோ தெரபி செய்தேன். மறுபடியும் கேன்சர் வந்தது. மீண்டும் சிசிச்சை எடுத்தேன்.
எனது தைரியத்தை மட்டும் இழக்கவில்லை. இறுதியில் கேன்சரை விரட்டினேன். எந்த வியாதியையும் ஒருவர் நினைத்தால் அதனை விரட்டி விட முடியும். உடலில் உயிர் இருக்கும் வரை அதனை எதிர்த்துப் போராட வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க கூடாது," என்று கூறினார்.

No comments:
Post a Comment