அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியை தேர்வு செய்யும் போட்டியில் 88 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்டனர்.
இதன் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க, ஜமாய்கா, நேதர்லாந்து, உக்ரைன் மற்றும் கொலம்பியா நாட்டின் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக பல கட்டமாக நடைபெற்ற போட்டிகளில் இருந்து படிப்படியாக அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் 15 போட்டியாளர்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த நோயோனிடா தேர்வானார். ஆனால் அவர் முதல் 10 பேரில் நுழையவில்லை.
கடைசியாக இறுதிப் போட்டிக்கு 5 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பவுலினா வேகா Miss Universe 2014 தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு கடந்த வருடம் பிரபஞ்ச அழகியாக திகழ்ந்த வெனிசுலா அழகி கேப்ரிலா முடி சூட்டினார்.

No comments:
Post a Comment