தற்போது இருக்கும் இசையமைப்பாளர்களில் இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் என்றால் அது அனிருத்தான். இவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. கடைசியாக இவரது இசையில் வெளிவந்த கத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
விரைவில் அவரது இசையில் காக்கி சட்டை படமும் வரவிருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ’தல அஜித்’ படத்திற்கு இசையமைக்க போவதாக தகவல் வந்துள்ளது. இதற்கு முன்பு தளபதி படத்துக்கு இசையமைத்த அனிருத் அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி அடுத்ததாக தல படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டாராம்.
அஜித் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் என்னை அறிந்தால் படத்திற்கு முதலில் அனிருத் தான் இசையமைக்க வேண்டியது. ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. ஆனால் சிறுத்தை சிவா அஜித்தை வைத்து மீண்டும் இயக்கும் புது படத்திற்கு அனிருத் தான் இசையாம்.
இந்த படம் நகரத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாம். நகரத்திற்கு ஏற்ற துள்ளல் இசையை கொடுக்கவே அனிருத்துக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம். அஜித் இரண்டு மாதம் பிரேக் எடுத்த பிறகு சிவாவின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment