Saturday, 24 January 2015

எமி ஜாக்ஸன் பாற்றி வெளிவராத ரகசியம்..!


'மதராசப்பட்டினம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதற்கு பிறகு 'தாண்டவம்‘படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவரை ஓரளவுக்கு அடையாளம் காட்டினாலும் சமீபத்தில் வெளிவந்த ’ஐ' படம் அவரை இந்திய அளவில் புகழடைய செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘கெத்து’ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்ஸனை பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது. அதாவது எமி ஜாக்சன் என்றால் அழகு, கவர்ச்சி, மாடலிங் என்று மட்டும்தான் தெரியும்.
ஆனால் எமி மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர் என்று கூறப்பட்டாலும், இவர் ஸ்போர்ட்ஸிலும் அதிக ஆர்வமுள்ளவராம். இவருக்கு மிகவும் பிடித்த ஸ்போர்ட்ஸ் ‘கிக் பாக்சிங்’காம். எமி ஜாக்சன் இப்போதும் ‘கிக் பாக்சிங்’பயிற்சி பெற்று வருகிறாராம்.
இது இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்.. அதுமட்டுமல்ல கிக் பாக்சிங் சம்பந்தப்பட்ட ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் எமியோட நீண்ட நாள் ஆசையாம்..

No comments:

Post a Comment