Saturday, 24 January 2015

பாப் பாடகிகளின் அரை குறை ஆடை கவர்ச்சி சண்டை...!!


ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகி செலினா கோமஸ். இவரது கவர்ச்சியான தோற்றமும், இனிமையான குரலும் உலகம் முழுவதும், பல்லாயிரக்கணக்காண ரசிகர்களை இவருக்குத் தேடித் தந்துள்ளது.
மைலி சைரஸ்ஸும் பிரபல பாப் பாடகி தான் என்றாலும், இவருக்கு செலினா அளவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் கிடையாது. இவர்கள் இருவரும் டிஸ்னி தொலைகாட்சியில், குழந்தை நட்சத்திரங்களாகத் தோன்றிப் பின் இசையில் குதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்ஸ்டாகிரம்மில், மைலி, செலினாவைக் கேலி செய்வது போல ஒரு பிக்கினி படத்தை போட்டுள்ளார். இதற்கு, செலினா ரசிகர்கள் மைலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது, கடந்த ஜனவரி 14ம் தேதி அன்று, செலினா, தன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில், குளித்து விட்டு வந்து கருப்பு பிக்கினி அணிந்தவாறான ஒரு கவர்ச்சியான போட்டோவை போட்டுள்ளார்.
இதைக் கலாய்க்கும் படியாக, இரு தினங்களுக்கு முன் ஜனவரி 21 செலினா எப்படி இருக்கிறாரோ அதே போல் முகத்தை மாற்றிக் கொண்டு உதட்டை குவித்துக் கொண்டு, அதே கருப்பு பிக்கினியில், ஒரு போட்டோவை எடுத்து இன்ஸ்டாகிரமில் வெளியிட்டுள்ளார் மைலி.
அது மட்டும் இல்லாமல், இந்த போட்டோவுக்கு கீழ், “Do yiew tink if I push muah titties up I’ll get mo followahhhzzzz?” என்று கேப்ஷன் போட்டுள்ளார் மைலி. அதாவது, மைலிக்கு இன்ஸ்டாகிரமில் உள்ள ஃபாலோவர்ஸின் எண்ணிக்கை, 15 மில்லியன்.
ஆனால் செலினாவுக்கோ 22 மில்லியன் ஃபாலோவர்ஸ். இதைக் குறிப்பிட்டுத் தான், மைலி, இன்னும் கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தால், இன்னும் கொஞ்சம் ஃபாலோவர்ஸ் கிடைப்பாங்களா என்று கேட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு இணையத்தில் செலினா ரசிகர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டதாம்.
மைலியின் போட்டோவையும், செலினாவின் போட்டொவையும் கம்பேர் செய்து கண்டபடி கமண்ட் செய்து செலினா ரசிகர்கள், மைலியை கிழி கிழி கிழி என கிழித்து வருகிறார்களாம். நம்ம ஊரில் தல, தளபதி, ரசிகர்களின் சண்டையைப் போல பல மடங்கு பெரியதாக வெடித்துள்ளது இந்த சண்டை.
ஒரு ஹேஷ் டேக் கிரியேட் செய்து அதை டுவிட்டரில் டிரெண்ட் செய்து சண்டை போட்டுள்ளனர் செலினா ரசிகர்கள். இதனால், கடந்த இரு தினங்களில் இந்த செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் வேடிக்கை என்ன வென்றால், பெண் ரசிகர்கள் ஒரு புறம் திட்டிக் கொண்டு இருக்க கவர்ச்சியான இந்த போட்டோக்களை பெரும்பாலான ஆண் ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்களாம்.

No comments:

Post a Comment