Sunday, 25 January 2015

ஆளப்பாத்தா ப்ளஸ் -2 படிக்கிற மாதிரியா தெரியுது? கிண்டலடிக்கும் நடிகைகள்..!


'சுந்தரபாண்டியன்’படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானாவர் நடிகை லட்சுமி மேனன். தான் நடித்த முதல் தமிழ்ப் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றதால் அடுத்து பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் நடித்தார்.
இந்தப்படத்தில் நடித்தப் போது லட்சுமிமேனன் ஒன்பதாம் வகுப்புதான் படித்து வந்ததாக சொன்னார்கள். அப்போது அவரது தோற்றத்தைக் கண்டு நம்புற மாதிரி இல்லையே என்று சிலர் கூறினார்கள். இருந்தாலும் பார்க்க பக்கத்து வீட்டு பெண்ணைப் போல இருந்ததால் அவருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனால் பல படங்களில் நடித்தார். 2012ஆம் ஆண்டு கும்கி படத்தில் நடித்தவர் அதையடுத்து இரண்டே வருடங்களில் குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என அரை டஜன் படங்களில் நடித்து முடித்து விட்டார். தற்போது சிப்பாய், கொம்பன் மட்டுமே அவரது கைவசம் இருக்கிறது.
இந்த நிலையில், கொம்பனுக்கு பிறகு அவருக்கு புதிய படங்கள் எதுவுமே கமிட்டாகவில்லை. ஆனபோதும், அவர் தனக்கு படமே இல்லாததை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. யாராவது அவரிடன் ஏன் பட வாய்ப்புகளை உங்களுக்கு வரவில்லை என்றால், ப்ளஸ் 2 தேர்வு உள்ளது அதனால்தான் புதிய படங்களை தள்ளி வைத்திருக்கிறேன். பரீட்சை எழுதிய பிறகு மீண்டும் அதிரடியாக படங்களை கைப்பற்றுவேன் என்று கூறி வருகிறார்.
ஆனால் அதைக்கேட்கும் சில கோலிவுட் நடிகைகளோ, தனகுகு படமே இல்லை என்பதை ஓப்பனாக சொல்ல கஷ்டப்பட்டு படிப்பை காரணம் காட்டுவது ஒன்றும் தப்பில்லை. ஆனால் எத்தனை வருடத்துக்கு இப்படி ப்ளஸ்-2 படிப்பதாகவே சொல்லிக்கொண்டிருப்பார். ஆளப்பாத்தா ப்ளஸ் -2 படிக்கிறவர் மாதிரியா தெரியுது? என்று லட்சுமி மேனனை கிண்டல் செய்யும் விதத்தில் பேசி வருகிறார்களாம்.

No comments:

Post a Comment