Monday, 26 January 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஜகா வாங்குது காங்கிரஸ்..!!


தமிழ்நாட்டின் தலைஎழுத்தையே மாற்றப்போகும் தேர்தலாகக் கருதப்படுவது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல். இந்த தேர்தலின் வெற்றி வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அடி போடும் என்றும் கூறப்படுகிறது.
ம.தி.மு.க., ப.ம.க., இரு கட்சிகளும், இந்தத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. தே.மு.தி.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் தமிழக பா.ஜ.க.,வின் துனைத்தலைவர் சுப்பிரமணியன் நிற்கிறார்.
தி.மு.க., சார்பில் ஆனந்தும், அ.தி.மு.க., சார்பில் செண்டிமெண்டாக எஸ்.வளர்மதியும் வேட்பாளர்களாக நிற்கின்றனர். இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் இந்தத் தேர்தலில் பங்கேற்குமா, பங்கேற்காதா என்ற குழப்பம் வெகு நாட்களாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அவசர கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றினார்கள். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவனும் தலைமையிடம் அனுமதி கேட்டு தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். இதன் முடிவு இன்று தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதன் படி, இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியடப்போவதில்லை என்றும், இந்தத் தேர்தல் ஜனநாயக முறையில் நடக்காது எனவே இத்தேர்தலை, காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசியதாவது:
''ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்பதால் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது. இந்த தேர்தலில் பணம் கொடுத்து ஜெயிக்கப் போகிறார்கள்.
இதில் எங்கள் சக்தியை வீணாக்க விரும்பவில்லை. பா.ஜ.க. பணம் தர தயாராக உள்ளது. அவர்களுக்கு நிறைய முதலாளிகள் பணம் தர தயாராக உள்ளனர்.
சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி வாசன் கட்சியில் இணையப்போவதாக கூறப்படுவது பற்றி எனக்கு தெரியாது. அது யூக செய்தி. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் போனாலும் நாங்கள் கவலைப்படவில்லை" என்றார்.

No comments:

Post a Comment