Monday, 26 January 2015

இந்த ஜூஸெல்லாம் குடிச்சா டாக்டரே தேவையில்லையாம்..!?


சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் அடிக்கடி உடல் நலமில்லாமல் போய்விடுகின்றது. கரண்ட் பில், பால் பில், மொபைல் பில் லிஸ்ட்டில் ஹாஸ்பிடல் பில்லும் இணைந்து விடுகிறது. அந்தளவிற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாகியுள்ளது, என்றே கூறலாம்.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ஜூஸ்களைப் பற்றி காணலாம்.

க்ரீன் டீ:
தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கின்றது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் க்ரீன் டீ குடித்து வந்தால், புற்றுநோய் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிவி ஜூஸ்:
கிவி பழத்தை ஜூஸ் குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு வேண்டிய வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி கிடைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
கேரட் ஜூஸ்:
கேரட்டை ஜூஸ் செய்து குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராகவும் இயங்கும். கேரட் உடலில் நோயேதிர்ப்பு தன்மையை அதிகரிக்கின்றது.
லைம் ஜூஸ்:
எலுமிச்சையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும். தினமும் எலுமிச்சை ஜூஸை குடித்து வருவது மிக நல்லது.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இதனை தினம் தினம் குடித்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, முளையின் இயக்கமும் சீராக இருக்கும். மேலும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment