பாலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர், நடிகைகளை கௌரவிக்க பல விருது விழாக்கள் நடைபெற்று வருகின்றன. IIFA, ஃப்லிம் ஃபேர் என பல அமைப்புகள் விருது வழங்கும் விழாக்களை வழங்கி சிறப்பிக்கின்றது.
அதேபோல, மிக மோசமான நடிகர், நடிகைகள் மற்றும் படங்கள் உட்பட பல பிரிவுகளில் சொதப்பல் பார்ட்டிகளுக்கும் விருது வழங்க ஆரம்பித்துள்ளனர். Ghanta Awards என அழைக்கப்படும் இது கடந்த 2010 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதினை சினிமா விமர்சகர்களான, பிரஷாந்த் ராஜ்கவுடா மற்றும் கரண் அன்ஷுமான் இருவரும் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த விழா நடைபெற இருக்கின்றது.
இதில் மோசமான நடிகர், நடிகைகள் போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள்,
மோசமான நடிகர்கள்:
சல்மான் கான் (ஜெய் ஹோ, கிக்)
சயஃப் அலி கான் (ஹம்ஷக்கல்ஸ்)
அஜய் தேவ்கன் (சிங்கம் ரிட்டன்ஸ், ஆக்ஷன் ஜாக்சன்)
மோசமான நடிகைகள்:
சோனாக்ஷி சின்ஹா (ஹாலிடே, ஆக்ஷன் ஜாகசன், லிங்கா)
பிபாசா பாஷூ (ஹம்ஷக்கல்ஸ், கிரியேச்சர் 3டி)
மோசமான படங்கள்:
கிக்
ஹம்ஷக்கல்ஸ்
குண்டே

No comments:
Post a Comment