இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்து வருப்பவர் நடிகை நயன்தாரா. உதயநிதியுடன் நண்பேன்டா, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், ஆரியுடன் நைட் ஷோ, விஜய் சேதுபதியுடன் நானும் ரெளடிதான், சூர்யாவுடன் மாஸ் உட்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட ஹாரர் படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யாவுடன் ‘மாஸ்’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஹீரோ ஆரியுடன் இணைந்து நடிக்கும் ‘நைட் ஷோ’.இது இரண்டும் தான் அந்த படங்கள்.
இதில் நைட் ஷோ படத்தால் நயனுக்கு பெரிய தலைவலியே உண்டாகிவிட்டதாம். காரணம் நைட் ஷோ என்ற தலைப்பை பார்த்து நயன்தாராவின் நெருங்கிய நண்பர்களே இது என்ன அந்த மாதிரியான படமா..?, கில்மா படமா..? என்கிற ரேஞ்சில் கேள்விகளை கேட்டுத் தொலைக்க, உடனே படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி விட்டாராம் நயன்.
இந்த படத்தின் பெயர் ‘நைட் ஷோ’ என்பது மக்களிடம் சற்று தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் என்பதால் நயனே இதை மாற்ற சோல்லி இருக்கிறாராம். இதனால் படத்தின் பெயரை ’மாயா’ என்று மாற்றி விட்டாராம் இயக்குநர்.

No comments:
Post a Comment