Monday, 26 January 2015

குடி, கும்மாளம், கூத்து, டான்ஸ்.. இது த்ரிஷாவோட பார்ட்டி..!


நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 23 ஆம் தேதி சென்னையில் ஜோராக நடந்தது.
இதில் கமல், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ‘ஜெயம்’ ரவி, சித்தார்த், இயக்குநர்கள் மணி ரத்னம், ஏ.எல்.விஜய், நடிகைகள் ராதிகா, அமலா பால், கெளதமி, சுகாசினி, ரம்யா கிருஷ்ணன் உட்பட ஏராள மான திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துக்கொண்டனர்.
நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த நாள் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் த்ரிஷாவும், வருண்மணியனும் சேர்ந்து திரையுலக நண்பர்களுக்கு விருந்து கொடுத்தனர். இந்த விருந்தில் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, நயன் தாரா, அமலா பால் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் விஜய், அஜித் கலந்து கொள்ள வில்லையாம். இந்தப் பார்ட்டியில் நடிகை குஷ்பு, சார்மி நடிகர் சிம்பு, தனுஷ், மாதவன், இசையமைப்பாளர் ஸ்ரீதேவி பிரசாத், அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த பார்ட்டியில் விருந்துடன் சேர்த்து மது, கூத்து டான்ஸ் என்று களைக்கட்டியது.

No comments:

Post a Comment