Monday, 26 January 2015

டுவிட்டரால் இந்த நடிகைக்கு நடந்த அதிசயத்தை பாருங்க..!


’கிஸ்’ என்னும் தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரியா பானர்ஜி. தமிழில் 'உலா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகை பிரியா பானர்ஜிக்கு டுவிட்டர் மூலம் பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். நம்மூர் நடிகைகள் பலர் பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கும் நிலையில் டுவிட்டர் மூலம் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது பல நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா 'ஜாஸ்பா’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் இர்பான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஷோபனா ஆஸ்மி, சித்தார்த் கபூர், அனுபம் கேர், அதுல் குர்கர்னி, ரோஞ் சானய்யால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்திற்கான ஹீரோயினை தேடிக்கொண்டு இருந்த போதுதான் பிரியா தோன்றும் வீடியோவொன்றை டுவிட்டரில் பார்த்திருக்கிறார் சஞ்சை குப்தா. அந்த வீடியோவை பார்த்து மெர்சலான அவர் பிரியாவை பற்றி விசாரித்து தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம். இதை சஞ்சை குப்தாவிற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் தனது முதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கடந்த 2012 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment