Monday, 26 January 2015

இங்கக் கூடவா அம்மாப் படம்…?? தமிழ்நாட்டுல யார் தான்யா முதல்வர்…??


இந்தியாவின் 66வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் இன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.
மேலும், புதுதில்லியில், முப்படையினரின் அணிவகுப்புடன், மாநிலங்களின் அடிப்படையில், வாகன ஊர்தி அணிவகுப்புகளும் நடப்பது வழக்கம். ஆனால், இம்முறை வெறும் 25 மாநிலங்களின் வகனஅணிவகுப்புகள் மட்டுமே இடம்பெற்றன.
பா.ஜ.க., ஆட்சி அமைத்துள்ள மாநிலங்களிலிருந்து மட்டுமே வாகன அணிவகுப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது என்ற ஒரு சர்ச்சையும் கிளம்பியிருந்தது. இந்நிலையில், தமிழகத்திலும் இது போலான ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையின் முன், தமிழக ஆளுநர் ரோசைய்யா கொடி ஏற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதை அடுத்து, முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து , தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.
தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, பள்ளிக்கல்விதுறை உள்பட 25-க்கும் மேற்பட்ட துறைகளின் சார்பில், அந்தந்த துறைகளால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகளை விளக்கும் வண்ணம் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெற்றன.
இந்த அணிவகுப்புகளில், முதல்வரது படம் மற்றும் முதல்வர் செய்த நலத்திட்டங்கள் உள்ளிட்டவை வருவது வழக்கம். ஆனால், இம்முறை, தமிழக முதல் ஓ.பன்னீர் செல்வம் எந்த ஊர்தியிலும் இடம்பெறவில்லை. மாறாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும், அவரது ஆட்சி காலத்தில் அவர் செய்த அரசுப் பணிகளுமே, ஊர்வலங்களாக வந்தன.
இது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வின் ஜெ. அன்பழகன், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டவரின் உருவத்தை குடியரசு தின அணிவகுப்பில் எடுத்து வருவது எந்த விதத்தில் நியாயம் என்று தன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பலத்து பதில் கருத்துக்களும் வந்துள்ளன.

No comments:

Post a Comment