Monday, 26 January 2015

ஏமாற்றிய ஜெயா... கடுப்பான விஜய் ரசிகர்கள்..!


ஜெயா டிவி மீது கடுப்பில் இருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள். காரணம் குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற கத்தி படத்தை ஒளிப்பரப்புவதாக ஜெயா டிவியில் விளம்பரங்கள் படுத்தப்பட்டன.
ஆனால் கத்தி படத்தை போடாமல் ‘பூவரசம்பூ பீப்பி' படத்தை ஒளிபரப்புகிறது ஜெயா டிவி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது. பொங்கல் சிறப்பு திரைப்படமாக கத்தி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பொங்கல் முடிந்த பின்னர் ஜெயா டிவியில் கத்தி படத்தின் விளம்பரம் ஒளிபரப்பினார்கள். இதனையடுத்து குடியரசு தினத்தன்று கத்தி ஒளிபரப்பகும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக பூவரசம்பூ பீப்பி என்ற படத்தை ஒளிபரப்புகிறது ஜெயா டிவி. கத்தியை எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

No comments:

Post a Comment