Sunday, 25 January 2015

விநோத பிரசவம்…!


தாயொருவர் மருத்துவமனை அறுவைச் சிகிச்சை பிரிவில் தனது இரட்டை குழந்தைகளை தனது கைகளைப் பயன்படுத்தி தானே பிரசவிக்க செய்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

நியூசவுத் வேல்ஸில் நியூகாஸலிலுள்ள ஜோன் ஹன்டர் மருத்துவமனையில் இடம்பெற்ற இந்த விநோத பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே 9 பிள்ளைகளுக்கு தாயான ஜெரி வூல்ப் (41 வயது) என்ற பெண்ணே தனது 10 வது, 11 வது குழந்தைகளான மேற்படி இரட்டை குழந்தைகளை தனது கைகளைப் பயன்படுத்தி அடி வயிற்றிலிருந்து வெளியேயெடுத்து மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தாயின் உதவியுடன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிரசவம் தொடர்பான இணையத்தள பக்கத்தை வாசித்து அதனை பின்பற்றி குழந்தைகளை அவர் பிரசவித்துள்ளார்.
அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பெறுவது ஜெரி வூல்பிற்கு இது ஐந்தாவது அனுபவமாகும். இத்தகைய அறுவைச்சிகிச்சை பிரசவங்கள் மருத்துவர்களாலேயே மேற் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment