Sunday, 25 January 2015

இன்றைய தினம்....!! (ஜனவரி 26)


1950
இந்திய குடியரசு தினம்…!!
இந்தியாவை இந்தியர்கள் ஆளுவதற்கு ஏற்றவாறு சட்டங்களை இயற்றி முடித்த தினம். இந்தியா 1947, ஆகஸ்டு 15ம் நாள் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது.
இந்தியா விடுதலை பெற்றிருந்தாலும், இந்தியக் குடியரசின் சட்டங்கள் ஆங்கிலேயர்கள் அமைத்து வைத்ததாகவே இருந்தது. இதில் இந்திய அரசுச் சட்டம் 1935 தான் இந்தியாவின் பிரதான அரசியல் அமைப்புச் சட்டமாக திகழ்ந்தது.
இந்த சட்டத்தை மாற்றியமைத்து செயலாக்கிய நாளே இந்தியக் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது. விடுதலைக்குப் பின் 1947, ஆகஸ்டு 28ம் நாள், இந்தியாவிற்கென ஒரு நிரந்தர அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அம்பேத்கர் தலைமையில், ஒரு வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.
இக்குழு 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது இடங்களில் சந்தித்து, விவாதங்கள் பல செய்து, சுதந்திர இந்தியாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின. 308 பக்கங்கள் எழுதப்பட்டிருந்த இந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தை 1950ம் ஆண்டு, 24ம் தேதி, சுந்தந்திர இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1948ம் ஆண்டு அப்போதிருந்த நேரு அமைச்சரவை, ராஜேந்திர பிரசாத் அவர்களை முதல் குடியரசுத் தலைவராக அறிவித்து, ஜனவரி 26ம் நாளை குடியரசு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், இந்நாள் தொடர்ந்து குடியரசு தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளன்று, நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செய்தல், சிறந்த வீரச் செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்குதல் ஆகியன நடைபெறும்.
மேலும், குடியரசுத் தலைவர், பிரதமர், முன்னிலையில், இந்திய தேசியப் படைகளின் அணிவகுப்பும் நடைபெறும். மாநிலங்களில் மாநில ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
மேலும், இந்தியக் குடியரசு தினவிழாவின் போது, உலக நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு வருவதும் வழக்கமாகி விட்டது. முதல் குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக, அப்போதைய இந்தோநேசிய அதிபர் சுகர்ணோ வந்திருந்தார். இந்த ஆண்டு சுதந்திர தின சிறப்பு விருந்தினராக ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர்.
1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
1788 - ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
1837 - மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1926 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
1930 - இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.
1949 - ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
1962 - ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.
1965 - இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது. 1980 - இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன. 2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இன்றைய சிறப்பு தினம்
உலக சுங்கத்துறை தினம்
ஆஸ்திரேலியா நாள் (ஆஸ்திரேலியா )
விடுதலை நாள் (உகாண்டா)

No comments:

Post a Comment