Saturday, 24 January 2015

ஏமாந்து போன ஒபாமா…!

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் அதிகாரப்பூர்வ 'டுவிட்டர்' என நினைத்து, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதே பெயருள்ள வேறொருவரை பின்தொடர்ந்துள்ளதாக 'டெலிகிராப்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
@david_cameron என்ற இங்கிலாந்து பிரதமரின் டுவிட்டர் கணக்கிற்கு பதிலாக, ஆர்கனில் வசிக்கும் @davidcameron என்ற ஒருவரின் கணக்கை ஒபாமா பின்தொடர்ந்துள்ளார்.
ஒபாமாவின் கணக்கை பின்தொடர்ந்து வரும் ஆர்கனைசிங் பார் ஆக்ஷன் என்ற அமைப்பே, இந்த கணக்கை பின்தொடர்ந்ததாக தெரிகிறது. ஒபாமா கணக்கை பின்தொடர்ந்ததால் ஒரே நாளில் பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் இவர் பிரபலமாகி விட்டார்.
இதுமட்டுமின்றி எனக்கு நெருக்கமான உலகின் நம்பிக்கைக்கு உரிய நண்பர்களில் இவரும் ஒருவராவார் என ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment