Saturday, 24 January 2015

ஒரே நேரத்தில் லிங்குசாமியின் 5 படங்கள்.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

அஞ்சான் படம் மூலம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான லிங்குசாமி இப்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரித்து வருகிறாராம்.
நான் கத்துகிட்ட மொத்த வித்தையும் ’அஞ்சான்’ படத்தில் டியூன் பண்ணி இருக்கேன் என்று வாயை விட்டு ரசிகர்களால் ஓவராக கலாய்க்கப்பட்டு மனவருத்தத்தில் இருந்த லிங்குசாமி தனது அடுத்த அடியை எடுத்து வைப்பதில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறாராம் .
தற்போது தனது அடுத்தப் படத்துக்கான வேலையில் நிதனாமாக இருந்து வரும் லிங்குசாமியும், அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸும் சேர்ந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்ப்பாக ஒரே நேரத்தில் ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறார்களாம். கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை அவர்கள் ஐந்து படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவற்றில் 'உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. 'உத்தம வில்லன்' படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், பாலசந்தர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
'இடம் பொருள் ஏவல்' படத்தை சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி, விஷ்ணு , நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 'ரஜினி முருகன்' படத்தை பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
'ரா ரா ராஜசேகர்' படத்தை பாலாஜி சக்திவேல் இயக்க, லிங்குசாமியின் அண்ணன் மருமகன் மதி நாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகை ஷகிதா பானு நாயகியாக நடிக்கிறார்.
’நான்தான் சிவா' படத்தை ஆர். பன்னீர் செல்வம் இயக்க லிங்குசாமியின் அண்ணன் மகன் வினோத் நாயகனாக நடிக்கிறகார். இந்த ஐந்து படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்கும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் உள்ளது கோலிவுட்.

No comments:

Post a Comment