இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி விராட் கோலியை நம்பிதான் இருக்கின்றது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
டெஸ்ட் போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி அனுபவம் வாய்ந்தது. ‘டெத் பவுலிங்’ இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
வீராட்கோலியை அதிகமாக இந்திய அணி நம்பி உள்ளது. இதனால் அவர் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். மிடில் ஓவரில் அவர் நன்றாக ஆடினால் ரெய்னாவும், டோனியும் சிறப்பாக நிறைவு செய்வார்கள்.
இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்போதுமே இரு அணிகளுக்கும் நெருக்கடியாக இருக்கும். பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு அதிகமான ரசிகர்களின் ஆதரவு இருக்கும். இதனால் இந்தியாவுக்கு கூடுதலாக நெருக்கடி இருக்கும்.
இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார்.
கடந்த உலக கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்களில் கேப்டன் டோனி, ரெய்னா, வீராட்கோலி, அஸ்வின் ஆகிய 4 வீரர்களே இந்த உலக கோப்பையில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

No comments:
Post a Comment