கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் ’என்னை அறிந்தால்’படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் திடீரென என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை ஜனவரி 29ஆம் தேதி தான் ரிலீஸாகும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. பின்பு அதுவும் இல்லை.. படம் பிப்ரவரி 5 ஆம் தேதி தான் ரிலீஸாகிறது என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் திடீர் திடீரென தள்ளிக்கொண்டே போவதற்கு பல விதமான காரணங்கள் கோடம்பாக்கத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றன. படத்தின் தாமதத்திற்கு அஜித்திற்கும், கெளதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்ட க்ளைமாக்ஸ் பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறுகையில், என்னை அறிந்தால் படத்தில் அஜித் வேறு மாதிரி க்ளைமாக்ஸை படமாக்க சொன்னதாகவும், கெளதம்மேனன் இன்னொரு மாதிரியாக க்ளைமாக்ஸை படமாக்கி விட்டதாகவும். அதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் வெளியான செய்திகளில் துளியும் உண்மையில்லை.
படத்தின் தாமதத்திற்கு அது காரணமும் இல்லை. வெளிநாடுகளில் படத்தை வெளியிடும்போது அந்தந்த நாடுகளில் சென்சார் சான்றிதழ் பெற வேண்டி உள்ளது. அதனால் ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே படத்தை அனுப்ப வேண்டும் என்றார்கள். அது முடியாமல் போனதால்தான் தாமதமாகி விட்டது. மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை என்று கூறினார்.
மேலும், இது குறித்து கௌதம் மேனன் கூறுகையில் ‘அஜித்துடன் இன்றளவும் நான் நல்ல நட்புடன் தான் இருக்கிறேன். படத்தில் 2 க்ளைமேக்ஸ் இருப்பதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டு இருக்கின்றன. நான் இரண்டு க்ளைமேக்ஸ் காட்சியை ஷுட் செய்யவில்லை’ என கூறியுள்ளார்.

No comments:
Post a Comment