அஜித், அனுஷ்கா, த்ரிஷா, நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள ’என்னை அறிந்தால்’ படத்தை பார்க்க ஒரு பெரும் ரசிகர் கூட்டம் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் ஆவலில் நாள்தோறும் நெய்யை ஊற்றி இன்னும் இன்னும் என்று சூடேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள் படக்குழுவினர்.
பொங்கலுக்கு வந்துவிடும். இல்லையில்லை, 29 ஆம் தேதி வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டேயிருந்த தயாரிப்பு தரப்பு இப்போது இன்னும் ஒரு வாரம் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டிருப்பதாக செய்திகளை வெளியிட்டனர். அதன்படி படம் வரும் பிப்ரவர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் என்னை அறிந்தால் படத்திற்காக, அஜித் செய்த ஒரு செயலை பார்த்து வியந்து விட்டாராம் கெளதம் மேனன். அஜித்தின் நடிப்பு அர்ப்பணிப்பு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையினர் பலரும் பாராட்டிவரும் நிலையில், அந்த பட்டியலில், தற்போது, இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து, இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளதாவது, “நிறைய பேர் பார்க்காத அஜித்தை இப்படத்தில் காட்டியிருக்கிறேன். அனைவருமே குடும்பத்தோடு இப்படத்தை பார்க்கலாம். இப்படத்திற்காக தொடர்ந்து 32 மணி நேரம் அஜித் டப்பிங் பேசினார். இப்படத்தில் அஜித்திற்கு அவ்வளவு ஈடுபாடு.
இப்படத்தோட கதை என்னவென்று முழுமையாக சொல்ல முடியாது. க்ரைம், கேங்ஸ்டர், போலீஸ், டான்சராக இருக்கிற ஒரு பெண், மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிற ஒரு பெண், ஒரு வில்லன் இவர்களைச் சுற்றி நடக்குற விஷயங்கள் தான் படத்தோட கதை என்று கூறினார் கெளதம் மேனன்.

No comments:
Post a Comment