முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி, சுனந்தா கொலை வழக்கில் தினமொரு திடீர் திருப்பம் வந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் தான் சுனந்தா கொலைக்கும் ஐபிஎல் பெட்டிங்க் சூதாட்டத்திற்கும் தொடர்புள்ளதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து, சுனந்தா கொடுத்துள்ள கடைசி பேட்டியில், தன் கணவர் சசி தரூரின் உண்மையான முகத்தை இவ்வுலகிற்குக் காட்டுவேன் என்று கூறியுள்ளது தற்போது வெளிவந்துள்ளது.
சுனந்தாவின் பிரேதப் பரிசோதனை முடிவில் இருந்து, சுனந்தா வெளிநாட்டு மருந்து மூலம் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி மருத்துவமனை உறுது படுத்தியது.
இதன் அடிப்படையில் தான் ஐபிஎல் சூதாட்ட முறைகேடுகள் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் சுனந்தா ஐபிஎல் சூதாட்டம் குறித்து டுவிட்டரில் அடிக்கடி டுவீட் செய்து வந்தார்.
இதனால், நிழல் உலக தாதாக்கள் இவரைக் கரம் வைத்து தூக்கி இருக்கக் கூடும் என்ற கோணத்திலும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆங்கில செய்தி சேனலான ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையாளர் ஒருவர்டம், சுனந்தாஇந்த டுவீட்கள் குறித்து பேட்டியளித்த தகவல் போலீசிடம் கிடைத்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையாளரரான, ராகுல் கன்வால் என்பவர் தான் அவர். இவரிடம் போலீசார் விராசித்ததில், சுனந்தாவிடம் ஐபிஎல் முறைகேடு குறித்து பேட்டி எடுக்க தான் கேட்டதாகவும், ஆச்சரியத்தக்க வகையில் அவரும் ஒப்புக் கொண்டு பேட்டி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் பேட்டியில் சுனந்தா கூறியதாவது:
"நான் டிபி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எப்படியிருந்தாலும் சாகத்தான் போகிறேன். நான் சாவதற்கு என்பாக, சசிதரூர் குறித்து வெளி உலகத்திற்கு காண்பித்துவிட்டுதான் சாவேன்"
இதற்குப் பின் அவரது இரங்கல் செய்தி தனக்கு அதிர்ச்சியைத் தந்ததாகவும் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார்.
இதுவரை சசி தரூர் தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுக் கூறிக்கொண்டு வந்தார். இருந்தாலும், டெல்லி சிறப்புப் போலீஸ் அவரை இரவு 4 நான்கு மணி நேரம் வைத்து விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment