மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த்-2 போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுர்வீன் சாவ்லா. இவர் தமிழை தவிர இந்தியிலும், தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் பாலிவுட்டில் ’ஹேட் ஸ்டோரி-2’ என்ற படத்தில் பயங்கர செக்ஸியாகவும், கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பேட்டி அளிக்கையில், பட வாய்ப்பு தருவதாகக் கூறி, படுக்கைக்கு அழைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு சிலர் கேட்பதையும், அதை அவர் சமாளிப்பதையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிக்க வந்து நான் இங்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக வேறு மாதிரி ‘அட்ஜஸ்ட்' செய்துகொள்ளச் சொன்னவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம்.
ஆனால் இப்போது நான், அநாகரிக விண்ணப்பங்களை என் போக்கில் எப்படிக் கையாளுவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். திரையுலகில் ஒரு நடிகர் அல்லது நடிகையின் திறமையைப் புரிந்து அதற்கேற்ற பாத்திரங்களைத்தான் தருகிறார்கள். வெறும் கவர்ச்சி மட்டும் காட்டச் சொன்ன பல வாய்ப்புகளை நான் நிராகரித்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.