Saturday, 30 May 2015

Dummy Tappasu Movie Song Teaser || Yenna Idhu Song || Praveen Prem, Ramy...

திருமணம் நின்றது ஏன்..? முதல் முறையாக வாய் திறந்த த்ரிஷா..!


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை ஊர் உலகமே அறியும். இந்த வருடம் இறுதியில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப் போகவில்லை என்றும், கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் நடிகை  த்ரிஷா தொடர்ந்து நடிக்க விரும்பியதாகவும்வருண்மணியன் தரப்பில் நடிக்க தடை விதித்ததாகவும் எனவேதான் திருமணம் ரத்தானது என்றும் கூறப்பட்டது.
ஆனால் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் இதை மறுத்ததுடன்,  த்ரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்க விரும்பியதே வருண்மணியன் தான் என்றும் திருமணம் நின்றுப்போனதுக்கு குடும்பத்தில் உள்ள சில பெரியவர்களால் தான் காரணம் என்றும் கூறினார். ஆனால் நடிகை  த்ரிஷா இதுவரை இந்த விவகாரம் குறித்து பதில் சொல்லாமல் இருந்தார்.
தற்போது முதல் தடவையாக திருமணம் நின்றது பற்றி கருத்து தெரிவித்து உள்ளார். திருமணம் நின்றுப்போனது குறித்து த்ரிஷா கூறியதாவது:–
எனது திருமணம் ரத்தானது உண்மைதான். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. சில விஷயங்கள் நம்மையும் மீறி நடந்து விடுகின்றன. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். திருமணம் நின்றது பற்றி நான் கவலைப்படவில்லை. அது பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கவும் விரும்பவில்லை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். தற்போது எனது முழு சிந்தனையும் சினிமாவில்தான் இருக்கிறது.
வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் கடவுள் விருப்பப்படியே நடக்கின்றன. எனக்கு நல்லா விஷயங்களை பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடிய குணம் உண்டு. என் வாழ்க்கையில் எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறினார் த்ரிஷா.

IIT விவகாரம்: நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்!! மாணவர்கள் மிரட்டல்!!


கடந்த இரு தினங்களாக, சென்னை மற்றும் தேசிய அளவில் ஒரு கலக்கி வருகின்றனர் மாணவர் அமைப்பினர்.
சென்னை ஐஐடி மாணவர்கள் சேர்ந்து நடத்தி வந்த அமைப்பு, ஏ.பி.எஸ்.சி. பெரியார், அம்பேத்கார் வட்டம் என்ற பொருள்படும் இவ்வமைப்பு, பகுத்தறிவுக் கருத்துக்களையும், மூட நம்பிக்கை எதிரான விழிப்புணர்வுகளையும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிறு பிரச்சாரங்கள் மூலம் மக்களிடையே பரப்பி வந்தது.
இதற்கிடையில், இவ்வமைப்பு மத்திய அரசுக்கு எதிராகவும், இந்துத்துவத்துக்கு எதிராகவும், செயல்படுவதாக மத்திய மனித வள அமைச்சகத்துக்கு அடையாளம் தெரியாத யாரோ கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தின் பேரில், விளக்கம் அளிக்க வேண்டும், என்று மத்திய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூ, சென்னை ஐஐடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதை அடுத்து, கடந்த 24ம் தேதி சென்னை ஐஐடி தலைமை, அரசுக்கு எதிராக கொள்கைகள் பரப்புவதாகக் கூறி பெரியார், அம்பேத்கார் வட்டம் என்ற ஏ.பி.எஸ்.சி மாணவர் அமைப்புக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணியின் இல்லத்தின் வெளியில் மாணவர் அமைப்பினர் போரட்டம் செய்தனர்.
மத்திய அரசுக்கும், இந்துத்துவ அமைப்புகளுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர். இதனால், இவ்விவகாரம் தேசிய அளவில் சூடு பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினரும், இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஐஐடி வாளாகத்தின் முன், மாணவர் அமைப்பினர் பலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களைப் போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க., தலைமையகமான சாஸ்திரி பவனில், காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் பிரிவினர் போராட்டம் செய்தனர். இவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதைத் அடுத்து மாணவர் அமைப்பினருக்கு ஸ்டாலின், வைகோ, உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர்.
”பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதும், அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை பரப்புவதும், பெரும் குற்றம் என்பதுபோல ஐ.ஐ.டி. நிர்வாகம் சித்தரித்து மாணவர் அமைப்புக்கு தடை விதிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். மக்களாட்சியில், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படைக் கருத்து உரிமையை பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்பதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உணர வேண்டும்.” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போராட்டம் முடிந்த உடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், ஏ.பி.எஸ்.சி மீதான தடையை நீக்கா விட்டால் இந்திய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது:
ஏ.பி.எஸ்.சி அமைப்புக்கு தடை விதித்தது மாணவர்கள் மீதான உளவியல் போர் என்றும், மாணவர் அமைப்பின் தடையை நீக்காவிட்டால் தொடர்ந்து போராடுவோம். மேலும், இந்துத்துவா மாணவர் அமைப்புகள் கருத்துகளை கூறியபோது தடை விதிக்காது ஏன்.
தடையை உடனடியாக ஐஐடி நிர்வாகம் நீக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தேசிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். ஏ.பி.எஸ்.சி மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை என உறுதி தர வேண்டும் என்றும், உறுதிதர தவறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக கல்லூரி தோறும் போராட்டம் நடத்தப்படும்.
பிற மாநிலங்களில் உள்ள மாணவர் அமைப்புகளை ஒன்று திரட்டவும் முடிவு செய்துள்ளதாகவும், தெலங்கானா, ஆந்திர மாநில மாணவர்களின் ஆதரவை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கடவுளையே விமர்சித்த மண் தமிழகம், மோடி அரசை விமர்சிப்பது மாணவர் உரிமை என்று கூறிய மாணவர் அமைப்பினர், மாணவர் உரிமையை தடுக்க நினைக்கும் செயல் சர்வாதிகார போக்கு கொண்டது. ஐஐடி நிர்வாகத்தின் இந்த சர்வாதிகார போக்கை முழுமையாக ஒடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

கேரட்டில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது தெரியுமா??


கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும். இதன் காரணமாகவே இதற்கு தாவரத் தங்கம் என்ற பெயரும் வந்தது.
அதனால் தான் என்னவோ இதன் விலையும் தங்கத்தினை போல உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
கேரட் பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்: இரவில் தூக்கம் வராததன் காரணம்…

தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.
குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும்.
மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.
தினமும் காலையில் கேரட் சாப்பிட்டு வந்தால் உங்கள் முகம் ஜொலிக்கும்.
ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.
கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்: தயிரின் தெரியாத ரகசியம்…!!


கை மாற்றிய தாணு.. கழட்டிவிட்ட விக்ரம்.. சோகத்தில் கெளதம் மேனன்..!


‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு இயக்குநர் கௌதம்மேனன் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் என்னும் மலையாள நடிகை நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற மலையாள படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை அடுத்து இயக்குநர் கெளதம் மேனன் விக்ரம்நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்று சமீபத்தில் கூறப்பட்டது. மேலும் இப்படத்தை ஐயங்கரன் நிறுவனம் தயாரிக்கப் உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இதற்கிடையில் ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விக்ரம். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்படத்தை ஐயங்கரன் நிறுவனத்துக்கு மாற்றிவிட்டாராம் தாணு. இதனால் விக்ரம் நடிக்கும் கௌதம்மேனன் படத்தை கைவிட்டுள்ளதாம் ஐயங்கரன் நிறுவனம்.
மேலும் கௌதம்மேனன் கூறிய கதையில் விக்ரமுக்கு முழு ஈடுபாடு இல்லை எனவும் கூறப்படுகிறது. விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாறியும் அல்லல் படும் இலங்கை தமிழர்கள்: கருணாநிதி


இலங்கையில், ஆட்சி மாறினாலும், தமிழர்களின் நிலை மாறவில்லை என்று கூறியுள்ளார் தி.மு.க., தலைவர் கருணாநிதி.
தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் இலங்கை தமிழர்களின் நிலங்களை திரும்பத் தராதது, தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்றாதது, 13வது சட்ட திருத்தத்தை மாற்ற நினைப்பது போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்வைத்து இலங்கையில் ஆட்சி செய்து வரும் சிறிசேன அரசை சாடியுள்ளார் கருணாநிதி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்ற மைத்திரி பால சிறீசேனா டெல்லிக்கு வந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்கவிருந்த வேளையில், நான் இந்தியப் பிரதமருக்கு 13-2-2015 அன்று விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்.
அந்தக் கடிதத்தில், "இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே திரு. மைத்திரி பால சிறீசேனா, 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில், இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாங்கள் நீண்ட நெடுங்காலமாக அனுபவித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே இலங்கைத் தமிழர்கள் சிறீசேனா அவர்களுக்கு விரும்பி வாக்களித்தார்கள்.
தேர்தலின் போது சிறீசேனா அவர்களும், அவருடைய கூட்டணிக் கட்சியினரும் அளித்த வாக்குறுதிகளைத் தமிழர்கள் உண்மையிலேயே நம்பினார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்றும் தமிழர்கள் பேராவலுடன் எதிர்பார்த்தார்கள்" என்று விளக்கியிருந்தேன்.
மேலும் என்னுடைய அதே கடிதத்தில், "தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழர்களைச் சோர்வடையச் செய்திருக்கின்றன. தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், செய்யப்பட்ட அறிவிப்புகளும் பல...ஆனால் இதுவரை நடைமுறைக்கு வந்தது ஒரு சிலவே; அல்லது எதுவும் நடைமுறைக்கே வரவில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சில நாட்களிலேயே சாதிக்கப்படக் கூடியவை கூட இதுவரையில் நடைபெறவில்லை.
தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை" என்றும், "சர்வதேசக் குழு ஒன்றை அமைத்து, இலங்கையில் நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை செய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இலங்கை அரசால் முறியடிக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் "தீர்மான" வடிவில் எடுத்துச் செல்வது பற்றி ஆராய்ந்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்றும் விரிவாக ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும், இந்திய அரசு ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளில் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஆனால், இன்று வெளிவந்திருக்கும் செய்தியைப் பார்க்கும்போது, இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றதற்குப் பிறகும்கூட, ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆக்லேண்டு என்னும் தனியார் நிறுவனம் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவுகள் "போருக்குப் பிந்தைய நிலையில், நீதிக்குப் போராடும் நிலை" என்ற தலைப்பில் 39 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும், ஆறு தமிழர்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் சுமார் 1.60 இலட்சம் இராணுவ வீரர்கள் அங்கு தங்கியிருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கவில்லை என்றும், அந்த நிலங்களை இராணுவ நிர்வாகம் வியாபார நோக்கில் பயன்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழர் பகுதிகளில் போர் நினைவு வெற்றிச் சின்னங்களும், புத்த மடாலயங்களும் அமைக்கப்பட்டு வருவதோடு, தமிழர்களின் கலாச்சாரத்தை அழிப்பதற்குப் பல்வேறு வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் 57 வது படைப்பிரிவின் தளபதி ஜகத் டயஸ் என்பவர் இராணுவத் தலைமை அதிகாரியாகத் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது புதிய அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே இந்தியப் பிரதமருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டியவாறு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இப்போது வெளிவந்துள்ள ஆக்லேண்டு ஆய்வு அறிக்கை இலங்கையில் அதிபர் மாறியும் தமிழர்களுக்கு எதிரான அநீதி குறையவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. அங்கே ஆட்சி மாறியது.. ஆனால் காட்சி மாறியதா?