Friday, 30 January 2015

இந்த வயதிலும் இப்படியா... ஷங்கர்..!


நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கியுள்ள படம் 'டூரிங் டாக்கீஸ்’.
இந்தப் படம்தான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று ரிலீசானது. படமும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
நேற்று இந்தப் படத்தை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த பலரும் எஸ்.ஏ. சந்திரசேகரனை பாராட்டினார்கள். குறிப்பாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், இந்த வயதிலும் கடுமையாக உழைத்து சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ளார் எஸ்.ஏ.சி.
குறிப்பாக அந்த இரண்டாம் பாகத்தில் சமூகத்தில் நிலவும் அவலத்தை அத்தனை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதுவரை யாரும் எடுக்கத் துணியாத கதை இது," என்றார். இயக்குநர் ஷங்கர், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

20-20 உலகக் கோப்பை 2016 இந்தியாவில்..!!


2016ஆம் ஆண்டுக்கான 20-20 உலகக் கோப்பை போட்டிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. துபாயில் 28ஆம் தேதி நடந்து கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
மேலும், மார்ச் 11-ல் தொடங்கும் இப்போட்டிகள் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும் எனவும். முழுக்க முழுக்க இந்தியாவில் இதன் போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பபை பயன் படுத்த பல வழிகள் உண்டு.. அதில் இதுவும் ஒன்று..!


பாலிவூட் நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர். ஆனால், நடிகை பிரியா பானர்ஜி பாலிவூட் திரையுலகிற்கு அறிமுகமாகுவதற்கான வாய்ப்பும் டுவிட்டர் மூலம் கிடைத்துள்ளதாம்.
2013 இல் வெளியான கிஸ் எனும் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பானர்ஜி. அதன்பின் மேலும் இரு தெலுங்குப் படங்களில் நடித்த அவர், தமிழில் உலா எனும் படத்திலும் நடித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் ஜாஸ்பா எனும் படத்தின் மூலம் பாலிவூட் திரையுலகிலும் பிரியா பானர்ஜிஅறிமுகமாகவுள்ளார். பல வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா பாலிவூட்டில் ரீ-என்ட்ரி படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் குப்தா இயக்கும் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு டுவிட்டர் மூலமே பிரியா பானர்ஜிக்கு கிடைத்தது என சஞ்சய் குப்தாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். பிரியா தோன்றும் வீடியோவொன்றை பார்த்த வேளையிலேயே அவர் குறித்து விசாரித்து தனது படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு சஞ்சய் குப்தா தீர்மானித்தார் என மேற்படி நபர் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் பிரியா பானர்ஜி வேறு இந்திப் படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என்பது சஞ்சய் குப்தாவுக்கு தெரியவந்ததாம். 24 வயதான பிரியா பானர்ஜி கனடாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாஸ்பா படத்தில் இர்பான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஷோபனா ஆஸ்மி, சித்தார்த் கபூர், அனுபம் கேர், அதுல் குர்கர்னி, ரோஞ் சானய்யால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
சமூக வலைத்தளம் மூலம் பாலிவூட் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புப் பெற்ற முதல் கலைஞர் பிரியா பானர்ஜி அல்லர். 2012 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன் கபூர் தனது முதல் படமான இஷாக்ஷாட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பேஸ் புக் மூலம் பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு தெரியுமா..? இவர் இறந்து விட்டாராம்..!


அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற உடற்பயிற்சி நிபுணரும் நடிகருமான கிரக் பிலிட், (greg plitt) ரயிலொன்றினால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார். 37 வயதான கிரக் பிலிட், கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ரயில் பாதையொன்றில் விளம்பரப் படப்பிடிப்பொன்றில் பங்குபற்றியபோது ரயில் ஒன்றினால் மோதப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டழகான தோற்றம் கொண்ட கிரக் பிலிட், கெல்வின் கிளெய்ன் எனும் பிரபல உள்ளாடை நிறுவனத்தின் மாடலாக பணியாற்றியவர். பின்னர் உலகப் புகழ்பெற்றஉடற்பயிற்சி ஆலோசகராக விளங்கினார்இவர் ஒரு தீவிரமான சாகசப் பிரியரும் ஆவார்.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பல சாகசங்களில் ஈடுபட்டிருந்தவர் கிரக் பிலிட். 2013 ஆம் ஆண்டில் ரயில் தண்டவாளத்தில் கிரக் பிலிட் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த காட்சி அடங்கிய வீடியோவொன்று அவர் உயிரிழந்த பின்னர் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமையும் அவர் ரயிலை விஞ்சும் வகையிலான சாகசமொன்றில் ஈடுபட முயன்றபோதே ரயிலால் மோதப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 அடி ஒரு அங்குல உயரமான கிரக் பிலிட், அமெரிக்க இராணுவ கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு பட்டம் பெற்று அமெரிக்க இராணுவத்தில் 5 வருடகாலம் பணியாற்றியிருந்தார்.
உடற்கட்டுத் துறையில் பல விருதுகளை வென்ற அவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு வெளியான பாபி எனும் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சில தொலைக்காட்சித் தொடர்களில் கிரக் பிலிட்டாவே அவர் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 வருடகாலத்தில் 250 இற்கும் அதிகமான இதழ்களின் அட்டைப்படங்களில் கிரக் பிலிட் இடம்பெற்றிருந்தார். கிரக் பிலிட்டின் திடீர் மரணம் காரணமாக அவரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிட்னஸ் மாடலான ஜெமி இசோன் என்பவர் கூறுகையில்,
"கிரக் பிலிட் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. அச்செய்தியை அறிந்தபோது எனது இதயம் வெடித்துவிடுவதைப் போல் இருந்தது" எனக் கூறியுள்ளார்.
"கிரக் பிலிட் எப்போதும் தனது ரசிகர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் அதிகமாக செயற்பட விரும்புபவர். உடற்பயிற்சித்துறையில் அவரைப் போல் வேறொருவர் இருக்கவில்லை. வாழ்க்கையில் அவர் பல விசயங்களை சாதித்திருந்தார். அவரின் வாழ்க்கை இவ்வளவு விரைவாக முடிந்தமை வேதனைக்குரியது" என ஜெமி இசோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி விளம்பரப் படப்பிடிப்பை நடத்துவதற்கு அப் படப்பிடிப்புக் குழுவினர் முறையான அனுமதியை பெற்றிருக்கவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மெட்ரோலிங் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"ரயில்பாதையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெறுவதில் சில நடைமுறைகள் உள்ளன" என மெட்ரோலிங் நிறுவன பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் ஆபாச படம்.. தற்கொலைக்கு முயன்ற நடிகை..!


பல தொலைக்காட்சி தொடர்களிலும், ‘சோக்கு சுந்தரம்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பவர் லாவண்யா. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் இரண்டு பட்டமேற்படிப்பு படித்துள்ளேன். சோக்கு சுந்தரம் என்ற படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளேன். சன், ஜெயா, விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்துள்ளேன். மேடைப்பாடகியாகவும் தொழில் செய்கிறேன். கெளரவமாக வாழும் எனக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் எனது படத்தை ஆபாசமாக வெளியிட்டுவிட்டனர். நண்பர்கள் உதவியுடன் அந்த ஆபாசபடங்களை அழித்துவிட்டேன்.
தற்போது மீண்டும் என்னை பற்றி தவறான தகவல்களை தீபிகா, தீபிகா என்ற பெயருள்ள பேஸ்புக்கில் வெளியிட்டு, ஆபாச படத்தையும் வெளியிட்டுவிட்டனர். என்னை விபசார அழகியாக சித்தரித்துள்ளனர். நானே வாடிக்கையாளர்களை உல்லாசத்துக்கு அழைப்பதுபோல தகவல்களை பரப்பி உள்ளனர். இதை பேஸ்புக்கில் பார்த்துவிட்டு ஏராளமான பேர் செல்போனில் தொடர்புகொண்டு தவறான உறவுக்கு அழைக்கிறார்கள்.
இதற்கு பதில் சொல்லமுடியாமல் அவமானம் அடைந்து 2 முறை நான் தற்கொலைக்கு முயன்றேன். எனது கணவர்தான் என்னை காப்பாற்றினார். எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. கணவர் நல்லவர் என்பதால், என்னை அவர் சந்தேகப்படவில்லை. என் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட பேஸ்புக் பக்கத்தை முடக்கவேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன். இவ்வாறு லாவண்யா தெரிவித்தார்.

செலீனா கோமஸின் புதிய காதல்…!


அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான செலீனா கோமஸ், ஸெட்லெனா எனும் இளைஞரை காதலிக்க ஆரம்பித்துள்ளாரென கூறப்படுகிறது. 22 வயதான செலீனா கோமஸ் கனடாவைச் சேர்ந்த பாடகர் ஜஸ்டின் பைபரை காதலித்து வந்தார்.
இவர்கள் அடிக்கடி பிரிவதும் மீண்டும் இணைவதுமாக இருந்தனர். இந்நிலையில் தற்போது செலீனாவும் ஜஸ்டின் பைபரும் பிரிந்துவிட்டனர் எனவும் செல்டனாவும் செலீனாவும் காதலிக்கின்றனர் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 25 வயதான செல்டனா டி.ஜே. கலைஞரும் பாடல் பதிவாளரும் ஆவார்.
இவர் சுருக்கமாக "செட்" என அழைக்கப்படுகிறார். அண்மையில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கல் விழாவின் பின்னரான விருந்து நிகழ்வின்போது செலீனாவும் செல்டனாவும் கரம் கோர்த்தவாறு அந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் நெருக்கமான நின்று போஸ் கொடுத்தனர். ஹாலிவூட்டில் இது ஆச்சரியமானதல்ல.
ஆனால், கடந்த திங்களன்று பிரத்தியேகமாக தான் பிடித்துக்கொண்ட செல்பீ புகைப்படமொன்றை செலீனா கோமஸ் வெளியிட்ட விதம் இவர்களின் காதலை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. அப்படத்தில் செலீனாவுக்குப் பின்னால் செட்லெனா காணப்பட்டார். தான் அவரை மிஸ் பண்ணுவதாக செலீனா குறிப்பிட்டிருந்தார்.
ஜஸ்டின் பைபரின் செயற்பாடுகளால் செலீனா விரக்தியுற்றிருந்தமை செலீனாவின் ரசிகர்களையும் கவலையடையச் செய்திருந்தது. தற்போது செட்லனாவுடன் நெருக்கமானபின் செலீனா புன்னகையுடன் காணப்படுவது குறித்து ஏராளமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மழலைகளோடு மழலையாய் ஹன்சிகா…!


ஜனவரி 26 ஆம் தேதி, தான் தத்தெடுத்த 25 குழந்தைகளுடன் குடியரசு தினத்தை மும்பையில் கொண்டாடினார் ஹன்சிகா மொட்வாணி.
அக்குழந்தைகளோடு இணைந்து மழலையோடு மழலையாய் விளையாடினார். அங்கிருந்த குழந்தைகளுக்கு மண் பாண்டங்கள், பொம்மைகள் செய்து பரிசளித்து மகிழ்வித்தார் ஹன்சிகா.
அளவிலா அன்பின் வெளிப்பாடாய் அமைந்திருந்தது குழந்தைகளின் புன்னகை மலர்ந்த முகங்கள்.