Monday, 1 June 2015

ஒரு நாளைக்கு 1 லட்சம்: என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..


பாலா இயக்கிய ’நான் கடவுள்’ மூலம் பிரபலமானவர் ராஜேந்திரன். தனது குறு குறு பார்வை, வழ வழப்பான மொட்டை தலை என்று முதல் படத்திலேயே தன் நடிப்பால் ரசிகர்களை மிரட்டிய ராஜேந்திரன், அப்போது இருந்து நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
நான் கடவுள் படத்திற்கு பிறகு பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கினார். இவரின் தோற்றத்தை வைத்து பல இயக்குநர்கள் ராஜேந்திரனை வில்லனாகவே பார்த்தனார். ஆனால் பாஸ்(எ)பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனை வில்லன் கலந்த காமெடியனாக கற்பனை செய்து பார்த்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.
அது படத்தில் பெரிய அளவில் பேச வைத்தது. தொடார்ந்து பல படங்கள் ராஜேந்திரனுக்கு கைகொடுத்தது. டார்லிங், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்களில் ராஜேந்திரனின் காமெடி பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான மாஸ் படத்திலும் சில காட்சிகளிலேயே வந்தாலும் கலக்கி இருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன்.
அதுமட்டுமல்ல மாஸ் படத்தின் வானொலி விளம்பரங்களை நான் கடவுள் ராஜேந்திரனை வைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். நாளுக்கு நாள் தனக்கு மவுசு கூடிக்கொண்டு வருவதை புரிந்து கொண்ட அவர் தன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தினமும் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த அவர் தற்போது தினமும் 1 லட்சம் சம்பளம் வாங்க ஆரம்பித்துள்ளாராம். என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..?

8 கால்களுடன் பிறந்த அபூர்வ நாய்க்குட்டி.. (வீடியோ உள்ளே)


வழக்கமாக ஆடு, மாடு, பூனைகளுக்கு தான் 6 கால்கள், 8 கால்கள் கொண்ட ஆபுர்வமான பிறப்பு இடம்பெறும். ஆனால் தற்பொது 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் வைனி என்ற இடத்தில் 8 கால்கள் கொண்ட விசித்திரமானநாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 5 குட்டிகளுடன் சேர்ந்து இந்த அதிசய நாய்க்குட்டி பிறந்துள்ளது.

அப்படியே இதையும் படிங்க: உலகிலேயே அதி வேகமான நாய்….

இந்த நாய்க்குட்டியின் வயிற்றுக்குக் கீழே ஒட்டியுள்ள அதன் 2 உடல்களின் காரணமாக 2 பின்னங்கால்களும் 2 வால்களும் உள்ளது. உடலின் மேற்புறத்தில், முன்புறம் ஒரு முன்னங்கால், பின்புறம் மற்றொரு முன்னங்கால் என ஒட்டு மொத்தமாக எட்டு கால்கலுடன் இந்த விசித்திர நாய்க்குட்டி பிறந்துள்ளது.
வழமையாக ஆடு, மாடுகள் தான் இது போன்ற விசித்திரமான தோற்றத்துடன் பிறக்கும். ஆனால் ஒருநாய்க்குட்டி இது போன்று பிறந்திருப்பது அபூர்வமானது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அப்படியே இதையும் படிங்க: பூனைகள் எஜமானர்களை மதிப்பதில்லை...!

த்ரிஷா, ஹன்சிகாவை அடுத்து பூனம் பாஜ்வா..!


‘சுந்தர் சி. இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம் உட்பட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற படம் ‘அரண்மனை’.
இப்படத்திற்கு முன்பு வரை ஆக்‌ஷன், காமெடி கலந்து கமெர்ஷியல் படங்களை இயக்கிவந்த சுந்தர் சி, முதன் முறையாக அரண்மனை படம் மூலம் த்ரில்லர் கலந்த காமெடி படத்தை கொடுத்தார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதன் அடுத்த பாகத்தையும் இயக்க தயாராகிவிட்டார் சுந்தர் சி. அரண்மனையின் அடுத்த பாகமான அரண்மனை 2-வில் சித்தார்த் நாயகனாக நடிப்பதாகவும், த்ரிஷாஹன்சிகா நாயகிகளாக நடிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தன.
இப்போது இந்தப் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக பூனம் பாஜ்வா இடம்பிடித்துள்ளாராம். முதலில் காஜல் அகர்வால் தான் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது.
ஆனால் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் பூனம் பஜ்வாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே த்ரிஷாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் ‘போகி’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஐ.டி விவகாரம்: 100-க்கும் அதிமான மாணவர்கள் கைது!!


சென்னை ஐஐடியில் பெரியார்-அம்பேத்கார் மாணவர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
சென்னை ஐ.ஐ.டிக்கு எதிராக டெல்லி பல்கலைகழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்- பெரியார் பெயரில் மாணவர் அமைப்பு ஒன்று இயங்கி வந்தது. இந்த அமைப்பு பிரதமர் மோடியையும் இந்துத்துவாக கொள்கைகளையும் விமர்சித்ததாக கூறி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ஒரு மொட்டை கடுதாசி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இத்தகைய பிளவுபடுத்தும் கருத்துகளை பரப்பும் அமைப்பு தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறு ஐ.ஐ.டி. இயக்குநருக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து, அம்பேத்கர்-பெரியார் பெயரிலான அமைப்புக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை விதித்தது.
இது தற்போது நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. டெல்லி, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் மாணவர்கள் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று தி.மு.க. மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள. புகழேந்தி தலைமை வகித்தார். பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..!


வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உட்பட பல பிரபலங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் "மாசு என்கிற மாசிலாமணி. இப்படம் ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்துடன் சோன்பப்டி, இருவர் ஒன்றானால் ஆகிய படங்களும் ரிலீஸானது. இந்த படங்கள் சின்ன பட்ஜெட் படங்கள் என்பதால் முதல் நாளிலேயே தியேட்டர்களில் தூக்கப்பட்டுவிட்டது. இதனால் மாசு படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக காஞ்சனா 2 படத்திற்கு பிறகு மாசு படம் தான் நல்ல வசூலை குவித்து வருகிறது.
தற்போது மாசு, டிமான்டி காலனி, 36 வயதினிலே ஆகிய படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மாசு படம் 3 நாட்களில் ரூ 1.84 கோடி வசூல் செய்துள்ளது.
டிமான்டி காலனி 2 வார முடிவில் ரூ 1.41 கோடி வசூல் செய்ய, 36 வயதினிலே 3 வார முடிவில் ரூ 2 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் காஞ்சனா 2 படம் 7 வாரத்தில் 6.27 கோடிக்கு மேல் செய்து இன்னும் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்துள்ளது.

Baahubali - The Beginning - Official Teaser (Tamil)

55 கோடி ரூபாய்க்கு கரண்ட் பில்!!? என்ன கொடுமை சார் இது!!


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவர் தனது வீட்டின் கரண்ட் பில்லை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். அப்படி எவ்வளவு என்று கேட்கின்றீர்களா?? ரூ.55கோடி!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர், ராஞ்சியில் உள்ள கட்ரு பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு வெயில் கொளுத்தி எடுத்த போதிலும், வீட்டில் ஏ.சி.யை பயன்படுத்தியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுமட்டுமின்றி தினமும் 7 முதல் 8 மணிநேரம் பவர் கட் வேறு!! இந்நிலையில் இவரது வீட்டிற்கு கரண்ட் பில் ரூ.55 கோடி என வந்தது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பில்லைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிரசாத் புகார் அளித்ததை தொடர்ந்து இரு ஊழியர்களை பணி நீக்கம் செய்து அம்மாநில மின்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது எழுத்துப்பிழையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இதனை சும்மா விடப்போவதில்லை என பிரசாத் கூறியுள்ளார். மேலும், மின்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.