Monday, 1 June 2015

ஒரு நாளைக்கு 1 லட்சம்: என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..


பாலா இயக்கிய ’நான் கடவுள்’ மூலம் பிரபலமானவர் ராஜேந்திரன். தனது குறு குறு பார்வை, வழ வழப்பான மொட்டை தலை என்று முதல் படத்திலேயே தன் நடிப்பால் ரசிகர்களை மிரட்டிய ராஜேந்திரன், அப்போது இருந்து நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
நான் கடவுள் படத்திற்கு பிறகு பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கினார். இவரின் தோற்றத்தை வைத்து பல இயக்குநர்கள் ராஜேந்திரனை வில்லனாகவே பார்த்தனார். ஆனால் பாஸ்(எ)பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனை வில்லன் கலந்த காமெடியனாக கற்பனை செய்து பார்த்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.
அது படத்தில் பெரிய அளவில் பேச வைத்தது. தொடார்ந்து பல படங்கள் ராஜேந்திரனுக்கு கைகொடுத்தது. டார்லிங், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்களில் ராஜேந்திரனின் காமெடி பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான மாஸ் படத்திலும் சில காட்சிகளிலேயே வந்தாலும் கலக்கி இருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன்.
அதுமட்டுமல்ல மாஸ் படத்தின் வானொலி விளம்பரங்களை நான் கடவுள் ராஜேந்திரனை வைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். நாளுக்கு நாள் தனக்கு மவுசு கூடிக்கொண்டு வருவதை புரிந்து கொண்ட அவர் தன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தினமும் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த அவர் தற்போது தினமும் 1 லட்சம் சம்பளம் வாங்க ஆரம்பித்துள்ளாராம். என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..?

No comments:

Post a Comment