‘சுந்தர் சி. இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம் உட்பட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற படம் ‘அரண்மனை’.
இப்படத்திற்கு முன்பு வரை ஆக்ஷன், காமெடி கலந்து கமெர்ஷியல் படங்களை இயக்கிவந்த சுந்தர் சி, முதன் முறையாக அரண்மனை படம் மூலம் த்ரில்லர் கலந்த காமெடி படத்தை கொடுத்தார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதன் அடுத்த பாகத்தையும் இயக்க தயாராகிவிட்டார் சுந்தர் சி. அரண்மனையின் அடுத்த பாகமான அரண்மனை 2-வில் சித்தார்த் நாயகனாக நடிப்பதாகவும், த்ரிஷா, ஹன்சிகா நாயகிகளாக நடிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தன.
இப்போது இந்தப் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக பூனம் பாஜ்வா இடம்பிடித்துள்ளாராம். முதலில் காஜல் அகர்வால் தான் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது.
ஆனால் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் பூனம் பஜ்வாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே த்ரிஷாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் ‘போகி’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment